Categories: சினிமா

பாடகி பவதாரிணி மறைவு! ‘தி கோட்’ படப்பிடிப்பு ரத்து!

Published by
பால முருகன்

பிரபல பின்னணி பாடகியும், இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி நேற்று (ஜனவரி 25) ஆம் தேதி காலமானார். இவர் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இவருடைய மறைவு சினிமாத்துறையில் பெரும் சோகத்தையும். அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

#RIPBhavatharini: ஜிவி முதல் ஹாரிஸ் வரை பவதாரிணி பாடிய ஹிட் பாடல்கள்!

இதனையடுத்து பவதாரிணி  மறைவால் தி கோட் படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து தி கோட் படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், பாடகி பவதாரிணி மறைவு செய்தியை கேட்டவுடன் சகோதரர்கள் வெங்கட் பிரபு, யுவன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். பாடகி பவதாரிணியின் உடலை இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு  கொண்டு வருவதற்காக சகோதரர் யுவன் சங்கர் ராஜா இலங்கை புறப்பட்டுள்ளார். சகோதிரியை இழந்துவாடும் வெங்கட் பிரபுவுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு விஜய் ‘தி கோட் ‘ படத்தின் படப்பிடிப்பை இன்று ரத்து செய்துள்ளதாகவும் நிலைமை எல்லாம் சரியான பிறகு தொடங்கலாம் எனவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், பவதாரிணியின் உடல் இன்று மாலை இலங்கையில் இருந்து சென்னைக்கு கொண்டு வர இருக்கிறது. அஞ்சலிக்காக முருகேசன் தெரு தி நகரில் உள்ள இருக்கும் இளையராஜா வீட்டில் வைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பவதாரிணியின் இறுதிசடங்கு நாளை  காலை நடைபெறும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

Recent Posts

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

23 minutes ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

56 minutes ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

1 hour ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

2 hours ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

2 hours ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

3 hours ago