Annamitta Kai: சீதையாக ஜெயலலிதா…திமுகவிலிருந்து எம்ஜிஆரின் கடைசி படம்! ‘அன்னமிட்ட கை’ படத்தின் சிறப்பு!

Annamitta Kai

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் நடிப்பில் கடந்த 1972 ஆம் ஆண்டு வெளியான ‘அன்னமிட்ட கை’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 51 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.  1972ல் இதே நாளில் வெளியான இந்த திரைப்படம் கலர் படம் வருவதற்கு முன், அப்போதய காலகட்டத்தில் எம்.ஜி.ஆரின் கடைசி கருப்பு வெள்ளை படம் இதுவாகும்.

இயக்குனர் எம்.கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ‘அன்னமிட்ட கை’ படத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா, பாரதி, சிவகாமியாக பண்டரி பாய், நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், வி.கே.ராமசாமி, நாகேஷ், மனோரமா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை எம்.எஸ்.சிவசாமிக்கு சொந்தமான ராமச்சந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, நாயர் ஏஎல் நாராயணன் கதை எழுதியிருந்தார். வாலியின் பாடல் வரிகளுக்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார்.

காலங்கள் கடந்தோடினாலும், இந்த திரைப்படம் இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. காரணம் படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகளும், பாடல்களும் மக்கள் மனதில் நீங்காமிடம் பிடித்திருந்தது. இந்த படத்தில்

மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள, 16 வயதினிலே 17 பிள்ளையம்மா, அன்னமிட்ட கை, ஒன்னொன்னா ஒன்னொன்னா, மயங்கி விட்டேன், அழகுக்கு என அனைத்தும் மனதில் நின்று இசைத்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, 16 வயதினிலே 17 பிள்ளையம்மா பாடல் கேரளாவின் குட்டிக்கானம் ஆஷ்லே தோட்டத்தில் 17 குழந்தைகளுடன் படமாக்கப்பட்டது. அந்த அளவிற்கு இந்த பாடலுக்கு சிறப்புண்டு.

அதுபோல், ’16 வயதினிலே 17 பிள்ளையம்மா’ என்ற பாடலின் பெயரை கமல்-ரஜினி நடந்திருக்கும் படத்துக்கு தலைப்பாக ’16 வயதினிலே’ என்று வைத்திருப்பார் இயக்குனர் பாரதி ராஜா. இப்படி படத்துக்கு ஒரு சிறப்பு என்றால், எம்.ஜி.ஆர் நடிகரும் மட்டும்மல்லாமல், அரசியலிலும் ஈடுபட்டவர் என்று நாம் அனைவரும் அறிவோம். அந்த வகையில், சினிமா பிரபலமாக இருந்த பொழுது, தனக்கு கிடைத்த பெயரை பயன்படுத்தி அரசியலில் நுழைந்தார்.

ஆரம்பகட்டத்தில், 1972ல், அண்ணாதுரை தலைமையிலான திமுக கட்சியின் உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், திமுக-வில் இருந்தபோது நடித்த கடைசிப் படம் அன்னமிட்ட கை, இது மேலும் ஒரு சிறப்பு. இந்தப் படம் வெளியாகி 1 மாதத்திற்குப் பிறகு, அவர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி, 1972 அக்டோபர் 17 அன்று தனது சொந்தக் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war