முதல் பாகத்தை மிஞ்சிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’! முதல் நாள் வசூல் இவ்வளவு வருமா?

ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்து ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் என்ற பெயரில் அதனுடைய இரண்டாவது பாகத்தை எடுத்துள்ளார்.
இரண்டாவது பாகமாக இருந்தாலும், அந்த கதைக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை அதனுடைய தொடர்ச்சியான பாகமும் இல்லை. ஒரு தனி கதையாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். இந்த ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
வரவேற்பு & விமர்சனம்
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். விமர்சனத்தை வைத்து பார்க்கையில், இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு படம் முதல் பாகத்தை மிஞ்சுவிட்டதாகவே பலரும் கூறி வருகிறார்கள்.
இதுதான் சினிமா! ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!
முதல் நாள் வசூல் விவரம்
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் படத்தை நன்றாக விளம்பரப்படுத்தி இருப்பதன் காரணமாக அங்கு 1 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ய வாய்ப்புகள் இருக்கிறதாம். அதைப்போல, படம் உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் 7 கோடி வரை வசூல் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாம். இந்த தகவலை வர்த்தக ஆய்வாளர் சித்தார்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி! பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்!
February 16, 2025
தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்! துணை முதல்வர் உதயநிதி எச்சரிக்கை!
February 16, 2025