திருவாரூரில் இன்று “கலக்கப்போவது யாரு” தீனாவுக்கு கல்யாணம்.!

dheena and vijay

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த தீனாவுக்கு இன்று திருவாரூரில் திருமணம் நடக்க உள்ளது. டீவி ஷோக்கள் தொடங்கி, கைதி, மாஸ்டர் படங்களில் நடித்த தீனா, இன்னும் சில பட வாய்ப்புகளை தன்வசம் வைத்துள்ளார்.

முன்னதாக, நான் வீடு கட்டி திருமணம் செய்து கொள்வேன் என்று தீனா கூறியிருந்தார். அதன்படி தீனா, சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த கிராமத்தில் புதிய வீட்டைக் கட்டி முடித்தார். இந்நிலையில், வீட்டாரின் ஏற்பாட்டிற்கேற்ப கிராபிக் டிசைனரை மணக்க உள்ளார். அர்ரேஞ் மேரேஜ் என்பதால் இனிதான் காதலிக்கப்போகிறோம் என்றும் தீனா மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்கின்றனர். ஆனால், தற்போது சில படங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் தினா, பலருக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுக்க முடியவில்லை. போன் செய்து வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினேன். உறவினர்கள் மத்தியில் இன்று திருவாரூரில் நடக்கும் திருமணங்களில் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என்று தெரியவில்லை.

இதனால், திரையுலகினர் பலரையும் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை என்றும் அவர்களை ஜூன் 10-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் கூறிஉள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்