Katrina Kaif morphed [File Image]
நடிகை ராஷ்மிகாவின் Deep Fake Edit வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய சர்ச்சையானது ஒரு நாள் கூட ஓயவில்லை அதற்குள், பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடித்திருக்கும் ‘டைகர் 3’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இணையத்தில் பரவும் அந்த புகைப்படத்தையும் Deep Fake Edit தான் மார்பிங் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, படக்குழு தரப்பில் வெளியிட்ட புகைப்படத்தில் அவர் உண்மையில் அணிந்திருந்ததை விட, மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தில் மிகவும் ஆபாசமாக உடை அணிந்திருப்பது போல் தெரிகிறது.
இதனால், கத்ரீனா கைஃப் புகைப்பட சர்ச்சையில் சிக்கினார். பின்னர், அது போலியானது என பழைய புகைப்படத்துடன் ஒப்பிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் அவரது ரசிகர்கள்.
நேற்று, நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை மார்பிங் செய்து AI தொழில் நுட்பம் மூலம் பரவி வந்த வீடியோவை பார்த்த பலரும் ஒரு லிப்டில் இப்படியா உடை அணிந்துகொண்டு வருவீர்கள் ராஷ்மிகா என்பது போல விமர்சித்து வந்தார்கள்.
அவர்களுக்கு எல்லாம் இது போலியான மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்று தெரியாமல் இருந்த நிலையில், சிலர் அது மார்பிங் செய்ய பட்ட வீடியோ என கூற ராஷ்மிகாவின் பெயர் அப்படியே ட்ரெண்ட் ஆக தொடங்கியது. பிறகு, ராஷ்மிகா மந்தனாவும் இந்த மார்பீங் வீடியோ குறித்து வருத்தத்துடன் விளக்கம் கொடுத்திருந்தார்.
இதனையடுத்து, நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த தவறான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இனிமேல் அது போன்ற வீடியோவை வெளியீட்டால் 3-ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…