Adipurush [Image source : file image]
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 17-ம் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சரியில்லை, படத்தின் ஸ்க்ரீன் பிளே சரியில்லை. படம் பொம்மை படம் போல இருக்கிறது என வெளிப்படையாகவே கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
ஆனால், விமர்சனங்கள் எப்படி வந்தாலும், வசூலில் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. படம் வெளியாகி மூன்று நாளில் ரூ.300 கோடியை கடந்துள்ளது. இன்னும் வசூலின் தீவிரம் நிற்பது போல் தெரியவில்லை. மறு பக்கம், ‘ஆதிபுருஷ்’ படத்தில் இடம்பெற்ற வசனத்தால் வெடித்த பிரச்சனை காரணமாக நேபாளம் உள்ளிட்ட சில இடங்களில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது, நேபாளத்தின் காத்மாண்டு மேயரிடம் ஆதிபுருஷ் படக்குழு மன்னிப்பு கோரியுள்ளது. சீதை இந்தியாவின் மகள் என்ற வசனம் ஆதிபுருஷ் படத்தில் இடம்பெற்றது. இதற்கு காத்மாண்டு மேயர் உட்பட அந்நாட்டு தலைவர்கள் பலரும் கோபம் அடைந்தனர்.
இந்த வசனத்தை நீக்கிவிட்டு, மன்னிப்பு கேட்காவிட்டால் இந்திய திரைப்படங்களை தங்கள் நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என எச்சரித்தனர். இதையடுத்து படக்குழு வசனத்தை நீக்கி மன்னிப்பு கோரியுள்ளது.
ஆதிபுருஷ்:
ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்ட புராண கதையை தழுவி எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படம் இறுதியாக 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஓம் ராவுத் இயக்கிய இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…