சொல்ல வார்த்தைகள் இல்லை…உணர்ச்சிவசப்பட்ட சந்தோஷ் நாராயணனின் நெகிழ்ச்சி பதிவு.!

Santhosh Narayanan - Superstar

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிப்பில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு, நவம்பர் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்து கொண்டாடடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் அவர்களை நேரில் சந்தித்தும் அவர் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அந்த பாராட்டுகளை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு சில வார்த்தைகளால் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் பாராட்டு

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவை ரஜினிகாந்த் பாராட்டினார். இது குறித்து ரஜிகாந்த், இப்படம் ஒரு குறிஞ்சி மலர், படத்தில் மக்களை கைத்தட்டவும், பிரமிக்கவும், சிந்திக்கவும், அழவும் வைக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். லாரன்ஸின் நடிப்பு பிரமிப்பை தருகிறது.

இதுதான் சினிமா! ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

இந்நாளின் திரையுலக நடிகவேள் SJ சூர்யா என்றும் கேமராமேன், கலை இயக்குநர், தயாரிப்பாளரையும் பாராட்டிய ரஜினி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பற்றி விரிவாக வர்ணித்து தனது பாராட்டு குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதாவது, “சந்தோஷ் நாராயணன்வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசை அமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி, தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார்” என்றார்.

For my boy…லாரன்ஸ் இப்படியெல்லாம் நடிப்பாரா.? சூப்பர் ஸ்டாரை மிரள வைத்த அவரது சீடர் ‘சீசர்’.!

சந்தோஷ் நாராயணன் பதிவு

இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இது குறித்து தனது பதிவில், எல்லோரும் வியந்து நோக்கும் ஒருவரிடம் இருந்து மனமார்ந்த பாராட்டுப் பெறுவது என்பது கிடைத்தற்கரிய பேறு. எமது அருமைத் தலைவர், சூப்பர் ஸ்டாரிடம் இருந்து இன்று நாம் அப்பேற்றைப் பெற்று அகமகிழ்ந்து, உளம் நெகிழ்ந்து நிற்கிறோம்.

இப்பாராட்டு எம்மை மேன்மேலும் கடினமாக உழைக்கவும் இன்னும் சிறந்த படைப்புகளை உருவாக்கவும் உந்துதலாகவும் உறுதுணையாகவும் நிற்கின்றது. சொல்லப் போதுமான வார்த்தைகள் இல்லை, எனினும் சுருக்கமாகவும் உருக்கமாகவும் சொல்கிறோம் “நன்றிகள் கோடி தலைவரே” என்று தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்