Nadodi Thendral : கடின உழைப்பை போட்டும் தோல்வி! ‘நாடோடி தென்றல்’ படத்தால் கண்ணீர் விட்ட ரஞ்சிதா!

nadodi thendral ranjitha

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் கார்த்திக் மற்றும் நடிகை ரஞ்சிதா ஆகியோர் நடிப்பில் கடந்த 1992 ஆம் ஆண்டு  வெளியான திரைப்படம் ‘நாடோடி தென்றல்’ .  தங்கராசு என்ற பொற்கொல்லரின் மகனும், ஜிப்சி மற்றும் கோழி விற்பனையாளரான பூங்குருவியும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் காதலிக்கும் கதையை வைத்து காமெடி கொண்ட ஒரு செண்டிமெண்ட் படமாக பாரதி ராஜா இயக்கி இருப்பார்.

இருப்பினும், தங்கராசு (கார்த்திக்)  விரைவில் ஒரு இளம் ஆங்கிலேய பெண்ணின் பாசத்தை ஈர்க்கிறார். இதனை வைத்து அந்த சமயமே வித்தியாசமாக யோசித்து படத்தை பாரதி ராஜா இயக்கி இருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார். மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை.

இருப்பினும் அந்த சமயம் பலருக்கும் இந்த படம் பிடித்தது அந்த அளவிற்கு நல்ல ஒரு காதல் கதையை தான் இயக்குனர் பாரதிராஜா கொடுத்திருந்தார். ஆனால், படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு அளவிற்கு படம் இல்லாததால் படத்தை அந்த சமயம் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும், படத்தில் பூங்குருவியாக  நடித்திருந்த நடிகை ரஞ்சிதாவுக்கு பெரிய அளவில் பெயரை பெற்று ‘நாடோடி தென்றல்’  கொடுத்தது .

இந்த திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே நடிகை  ரஞ்சிதாவுக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாம். ஆனால் பாரதிராஜா படம் என்பதால் கதை கூட கேட்காமல் சம்மதம் தெரிவித்து விட்டாராம் . ஏனென்றால், பாரதிராஜா படங்கள் அந்த சமயம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து அடுத்ததாக அவருடைய படங்களில் நடிப்பவர்களுக்கு வாய்ப்பை கொண்டு வந்துகொடுக்கும்.

இதன் காரணமாக ரஞ்சிதா ‘நாடோடி தென்றல்’  திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கியவுடன் ரஞ்சிதாவை பாரதிராஜா வாத்து மேய்க்க கூறியுள்ளார். இதனைக் கேட்ட ரஞ்சிதா மிகவும் மனமடைந்து அதிர்ச்சி ஆகிவிட்டாராம். பிறகு ஒவ்வொரு காட்சிகளிலும் நடித்துவிட்டு , நடித்துவிட்டு போர்வை மூடிக்கொண்டு படப்பிடிப்பு தளத்தில் கதறி அழுதாராம் .

எப்படியோ படம் நன்றாக இருந்தால் நமக்கு நல்ல பெயர் கிடைக்கும் என காத்திருந்த ரஞ்சிதாவுக்கு அதிர்ச்சியுடன் சேர்ந்து உற்சாகமும் கிடைத்தது. அதிர்ச்சி என்னவென்றால், படம் சரியாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உற்சாகம் என்னவென்றால், படத்தில் ரஞ்சிதா நடித்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்த படத்திற்கு பிறகு நடிகை ரஞ்சிதாவுக்கு சில படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், வாய்த்து மேய்த்ததிலிருந்து அந்த கிராமத்து பெண்ணாகவே வாழ்த்து நடிப்பில் கலக்கி இருப்பார் ரஞ்சிதா. அதைப்போல பாரதி ராஜாவும் படத்திற்காக கடினமாக உழைத்தார்.  இருப்பினும் படம் தோல்வி அடைந்தது அவர்களுக்கு அந்த சமயம் வருத்தத்தை கொடுத்தது. ஆனால், படம் தான் சரியாக போகவில்லை படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

குறிப்பாக “சந்தனா மார்பிலே”, “யாரும் விளையாடும் தோட்டம்”, “மணியே மணிக்குயிலே”, “எல்லா நேரமும்” உள்ளிட்ட பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த அளவிற்கு நல்ல பாடல்களை படத்திற்காக இசையமைப்பாளர் இளையராஜா கொடுத்திருந்தார். படம் பெரிய அளவில் பேசப்பட்டு இருந்தால் இன்னுமே பாடல்கள் பேசப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்