அடேங்கப்பா! ராஜமௌலி படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா கேட்ட பிரமாண்ட சம்பளம்!
மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியங்கா சோப்ரா ரூ.30 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளில் முன்னணியில் பிரியங்கா சோப்ரா தான் இருக்கிறார். தமிழ் சினிமாவில் நயன்தாரா அதிகம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார் என்றால் இந்திய சினிமாவில் பிரியங்கா சோப்ரா என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். குறிப்பாக, சமீபத்தில் கூட அவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.40 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
அதனைத்தொடர்ந்து தற்போது அவர் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்க கேட்ட சம்பளம் பற்றிய விவரமும் வெளியாகியுள்ளது. ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவின் 29வது படமான SSMB 29 படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகையாக பிரியங்கா சோப்ரா தான் நடித்து வருகிறார். படத்தை ஷிரி துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ரூ.1,000 கோடிகளுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் நடிக்க சம்பளமாக நடிகை பிரியங்கா சோப்ரா ரூ.30 கோடி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரியங்கா சோப்ரா கேட்டுள்ள சம்பளத்தையும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கொடுக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா இவ்வளவு கோடி சம்பளமா? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள்
பிரியங்கா சோப்ரா ஒரு படத்திற்கு 30 கோடி சம்பளம் கேட்டுள்ள நிலையில், அவர் தான் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற முதலிடத்தில் உள்ளார். அதனைத் தொடர்ந்து, தீபிகா படுகோன் ஒரு படத்திற்கு ரூ.15 முதல் ரூ.30 கோடி வரை சம்பளம் பெறுகிறார். கங்கனா ரனாவத் ரூ.15 முதல் ரூ.27 கோடி வரை, கத்ரீனா கைஃப் ரூ.15 முதல் ரூ.25 கோடி வரை, ஆலியா பட் ரூ.10 முதல் ரூ.20 கோடி வரை சம்பளம் பெறுகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025