LIVE : பட்ஜெட் கூட்டத்தொடர் முதல்…பல்வேறு அரசியல் நிகழ்வுகள் வரை!
ஜனவரி 31 இன்று முக்கியமான செய்திகள் பற்றி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : நாடாளுமன்றத்தின் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதலில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் காலை 11 மணிக்கு உரையாற்றி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார் .
பெரியார் குறித்து சீமான் பேசி வரும் நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் கோவி.செழியன் “பெரியார் என்ற மாமலையைத் தொட்ட எதிரி யாரும் தமிழ்நாட்டில் நிலைத்து நின்றதில்லை அப்படி பேசியவன் கற்றோடு காற்றாக பறந்து போவான். இது பெரியார் மண்..அண்ணா மண்..கலைஞர் மண் என்பதை ஈரோடு இடைத்தேர்தல் எடுத்துரைக்கும். சீமான் பேச்சுக்கு முத்த தலைவர்கள் பலரும் கண்டித்து பேசியுள்ளார்கள். அவர்களுடைய வழியில் சொல்லவேண்டும் என்றால் சீமான் செயல் தமிழகத்தில் புறக்கணிக்கப்படவேண்டிய ஒரு செயல்” எனவும் தெரிவித்துள்ளார்.