சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி – விஷாலின் ‘மதகஜராஜா’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரிய படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், திடீரென ரிலீஸ் தேதியை அறிவித்து ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது “மதகஜராஜா” திரைப்படம். அட ஆமாங்க, சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், அஞ்சலி, வரலக்ஷ்மி சரத்குமார், சந்தானம் என பலர் நடித்துள்ள ‘மதகஜராஜா’ படம் 12 வருடங்களுக்கு பிறகு, இன்று (ஜன.,12) திரையரங்குகளில் […]
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் திரையரங்கிற்கு வருகை புரிந்து வருகிறார்கள். இந்த நிலையில், படம் வெளியாவதை முன்னிட்டு படத்தின் பிரஸ் மீட் நடத்தப்பட்டது. பிரஸ் மீட்டில் பத்திரிகையாளர் போன வருஷம் அரண்மனை 4, இந்த வருஷம் மதகஜராஜா இத பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டதற்கு, இயக்குநர் […]
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில் நடைபெறும் 24H சீரிஸ் கார் பந்தைய போட்டியில் பங்கேற்க அஜித்குமார் கார் ரேஸிங் எனும் அணியை வழிநடத்தி வருகிறார். அஜித்குமார் கார் ரேஸிங் அணி கடந்த தகுதிச்சுற்றுகளில் கலந்து கொண்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்று வருகிறது. இன்றுகூட ரேஸ் குறித்து பேட்டி அளித்து இருந்தார். இப்படியான சூழல் அஜித்குமார் ரேஸிங் அணியில் இருந்து, அஜித்குமார் […]
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட அஜித், அதன் பிறகு சினிமா வாழ்வில் பிஸியான பிறகு தற்போது அதற்கென நேரத்தை ஒதுக்கி துபாயில் நடைபெறும் கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார். 24H கார் ரேஸிங்கில் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்று வருகிறது. இதில் நேற்று அஜித்குமார் அணி முதல் தகுதி சுற்றில் 7வது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்று […]
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இருக்காது என்பது சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. வழக்கமாகவே அவருடைய படங்களில் இருக்கும் பிரமாண்டம் இந்த படத்திலும் இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் படத்தில் இடம்பெற்ற பாடல்களை அவர் காட்டிய விதம் அத்துடன் ராம்சரனுக்கு வைத்த மாஸ் காட்சிகள் என அனைத்திலும் ஷங்கர் குறையாமல் கொடுத்திருக்கிறார். ஆனால், ரசிகர்கள் […]
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு வந்தார். அதன்படி, தற்பொழுது தன்னுடைய விருப்ப விளையாட்டான கார் ரேஸிங் பயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அட ஆமாங்க.. நடிகர் அஜித் குமார் இப்பொது துபாயில் நடைபெறும் 24H கார் ரேஸில் கலந்துகொண்டுள்ளார். சமீபத்தில், கூட அஜித் கார் ரேஸிங் பயிற்சியின் போது, பயங்கரமான விபத்தில் சிக்கினார். ஆனால், சிறிய காயம் கூட ஏற்படாமல் தப்பினார். இந்நிலையில், […]
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், “வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்” என ஊழியர்களுக்கு அறிவுறுத்திய L & T தலைவரை, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் விமர்சித்துள்ளார். அதாவது, L&T (லார்சன் அண்ட் டூப்ரோ) நிறுவனதலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் “ஒரு வாரத்துக்கு 90 மணிநேரம் நீங்கள் வேலை […]
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும் நோக்கத்தோடு ராம் சரணை வைத்து “கேம் சேஞ்சர்” திரைப்படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் பார்த்த பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். விமர்சனங்களை வைத்து பார்க்கையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்று தான் சொல்லவேண்டும். பாசிட்டிவ் ஆகவும் ஒரு பக்கம் விமர்சனம் […]
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில், ஜனவரி 10 ஆம் தேதி வெளிவரவிருந்த ‘விடாமுயற்சி’ படம், எதிர்பாராத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. புதிய வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது ஒரு பக்கம் இருக்க அவரது கார் ரெஸ் ரசிர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அந்த வகையில், 2 நாட்கள் முன்பு அஜித் கார் ரேஸிங் பயிற்சியின் போது, மிகவும் பயங்கரமான விபத்தில் சிக்கினார். இந்த […]
டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்தியா அணியில் இடம்பெறவில்லை. அதன்பிறகு, உள்ளூர் போட்டிகளில் விளையாடிய போதிலும், இந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவுக்காக இன்னும் விளையாடவில்லை. ஆனால் சமீபத்திய தகவல்களின்படி, அடுத்து வரவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட முகமது ஷமி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு 2023 ஆம் ஆண்டு ஒருநாள் […]
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித் ரசிகர்களுக்கு ஒரு சந்தோசம் வந்துவிடும் என்று சொல்லலாம். ஏனென்றால், அஜித் ரசிகர்கள் பெரும்பாலும் அஜித்தை ஒரு ஆக்சன் படத்தில் பார்க்க தான் விருப்பப்படுவது உண்டு. எனவே, லோகேஷ் கனகராஜும் முழுக்க முழுக்க அதிரடியான ஆக்சன் படங்களை தான் இயக்கியும் வருகிறார். எனவே, அவருடைய இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தார் என்றால் அந்த படம் எப்படி […]
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு ‘ரெட்ரோ’ என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, ரெட்ரோ திரைப்படம், மே 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025 கோடை விடுமுறையை குறிவைத்து படக்குழு இந்த வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். இந்த படத்தில், பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆக்க்ஷன் த்ரில்லர் நிறைந்த காதல் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. […]
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம் மத்திய போலீசார், அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர் வயநாட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கண்ணுரில் செம்மனூர் நகைக்கடை திறப்பு விழாவில் ஆபாச கருத்துகள் தெரிவித்ததாக பாபி செம்மனூர் மீது, நடிகை ஹனிரோஸ் புகார் அளித்திருந்தார். ஏற்கனவே, தனது பேஸ்புக் […]
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் ‘KGF 2’ திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த படம் எப்போதும் வரும் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ‘டாக்சிக்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பக்கம் ஒரு லேடி சிகிரெட் அடிக்க, இன்னொரு பக்கம் ஹீரோ கவர்ச்சியாக ஒரு லேடி மீது மதுவை ஊற்றுகிறார். இப்படி, படத்தின் கதையை பற்றி வீடியோ விவரிக்காமல், […]
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், கை நடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம் கொடுத்திருக்கிறார். விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் வதந்தி. மருத்துவர்களின் ஆலோசனைப்படி,விஷால் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். […]
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சரசரவென்று சுழன்று நின்றது. விபத்து நடந்த உடனே, காரில் இருந்து அஜித் வெளியேறும் காட்சி அனைவருக்கும் நிம்மதி அளித்தது. விபத்தின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விபத்தில் அவருக்கு எந்த காயமும் இல்லை என தெரியவந்துள்ளது. ஆம், அவரது போர்ஷே 992 சேதமடைந்தது, ஆனால் அவர் காயமின்றி வெளியே […]
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில், நித்யாமேனன், கிருத்திகா உதயநிதி, ஜெயம் ரவி, மிஷ்கின், அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள். விழாவிற்குள் வருகை தரும்போது மிஷ்கினை பார்த்து நித்யாமேனன் இன்ப அதிர்ச்சியடைந்து அன்பாக முத்தம் கொடுத்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விழாவிற்குள் வருகை தந்தவுடன் நித்யா மேனன் மிஷ்கினை பார்த்து ஆச்சரியத்தில் […]
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சர்ரென சுழன்று… சுழன்று நின்றது. உடனே அங்கிருந்த முதலுதவி செய்பவர், அவரை பாதுகாப்பாக மீட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருக்கு எந்த காயமும் இல்லை என தெரியவந்துள்ளது. நெஞ்சை பதற வைக்கவும் அந்த கோர காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோக்களை பார்த்து அஜித்தின் […]
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் “கங்குவா” திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும் அந்த அளவிற்கு பெரியதாக சாதனை படைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ரசிகர்களின் பெரிய ஆவலுக்கு இப்படம் முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. இந்த நிலையில், 97-வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த படத்திற்கான விருது, பிரிவின் தகுதிப்பட்டியலில் சூர்யாவின் ‘கங்குவா’ இடம்பிடித்துள்ளது. இந்த தகவலை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025 Oscars: […]
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு முக்கிய காரணமே அவர் ஹீரோவாக மட்டும் படங்களில் நடிக்காமல் கதைக்கு தேவைப்பட்டால் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது தான். அப்படி நடித்தாலும் அவருடைய கதாபாத்திரம் படத்தில் இறந்துவிடுவது போல அமைந்துவிடும். குறிப்பாக மெட்ராஸ், வாழை உள்ளிட்ட படங்களில் அவருடைய கதாபாத்திரம் இறந்தது போல காட்டப்பட்டிருக்கும். இதனை வைத்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கூட செய்து கலாய்த்து வந்தனர். […]