புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய விஜய்.! சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும் பூஜா ஹெக்டே.?
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜாஹெக்டே நடித்திருந்தார். இந்த படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. ஒரு சில கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அபர்ணா தாஸ், சதீஸ், பூஜா ஹெக்டே, நெல்சன், உள்ளிட்ட பலர் விஜயின் ராயல் ரோல்ஸ் காரில் பயணம் செய்தனர். அதற்கான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் செம வைரலானது.
இந்த நிலையில், அதைபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம், பீஸ்ட் படப்பிடிப்பில் நடிகர் விஜய் தெலுங்கில் செம ஹிட்டான புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளாராம். விஜய்யுடன் சேர்ந்து நெல்சனின் மகன் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து நடனம் செய்துள்ளனர்.
அந்த வீடியோ நடிகை பூஜாஹெக்டேவிடம் உள்ளது. அந்த வீடியோவை, விஜயிடம் அனுமதி கேட்டு விட்டு வெளியிடுவார். அல்லது வரும் ஜூன் 22-ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் அன்று அவருக்கு பரிசளிக்கும் வகையில் வெளியிட திட்ட மிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் ஆடிய அந்த வீடியோவை சீக்கிரம் ரிலீஸ் செய்யுங்கள் என அவரது ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.