பெரும் சோகம்…பிரபல நகைச்சுவை நடிகர் சேசு காலமானார்.!

Published by
கெளதம்

Actor Seshu: லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் சேஷு, உடல் நலக் குறைவால்  இன்று காலமானார்.

10 நாள்களுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது இதயத்தில் மூன்று அடைப்புகள் இருந்ததாகவும், அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

விஜய் டிவியில் மூலம் பிரபலமான சேசு, அதன்பின் நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர், கடைசியாக இவர் நடித்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ மிகுந்த வரவேற்பை பெற்றது.

கடந்த மார்ச் 15ஆம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேசுவின் மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறு பிக் பாஸ் அமுதவாணன் உள்ளிட்டோர் உதவி செய்யுமாறு வீடியோ வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அவரது மரணம் திரையுலகில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளத. தற்பொழுது, பலரும் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Recent Posts

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

8 minutes ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

8 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

9 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago