தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு.. பிரதமர் வாழ்த்து.! மிதுன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி.!

பழம்பெரும் இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, இந்திய சினிமாவுக்கு அவரது முக்கிய பங்களிப்பிற்காக தாதாசாகேப் பால்கே விருதைப் பெறுகிறார்.

Mithun Chakraborty - Modi

டெல்லி:  ஹிந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. இந்திய திரைப்படத்துறைக்கு அவர் அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்த விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

வரும் 8ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விழாவில் அவருக்கு விருது வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.

நடிகர் 1976 ஆம் ஆண்டு மிருகயா திரைப்படத்தில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழில் ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற படத்தில் அவர் நடித்திருந்தார்.

பிரதமர் மோடி வாழ்த்து

தாதா சாகேப் பால்கே விருது பெறும் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு, பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான எக்ஸ் பதிவில், “ஈடு இணையற்ற பங்களிப்பை அங்கீகரித்து அவருக்கு மதிப்புமிக்க விருது வழங்குவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், மிதுன் ஒரு கலாசார சின்னம், அவரது பல்துறை நடிப்பிற்காக தலைமுறைகள் கடந்தும் போற்றப்படுகிறார்” எனவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்

மிதுன் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி

தாதா சாகேப் பால்கே விருது தனக்கு அறிவிக்கப்படும் என கற்பனையில் கூட நினைத்து பார்க்கவில்லை என்று மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். கலைத்துறையினருக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த மிதுன், பேச வார்த்தையே இல்லை என்றும், இந்த விருதை தனது குடும்பத்தினர்களுக்கும், ரசிகர்களுக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
Chief pilot Ikrom Rifatli Fami Zainal - co-pilot Maitri Shithole
Rishabh Pant
Train Accident
Optimus Gen-2
MSDhoni
Kavarepet Train Accident - Madurai MP Su Venkatesan