குக் வித் கோமாளி டைட்டில் வென்ற பிரியங்கா! பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்ற பிரியங்காவுக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Cook With Comali 5 Title Winner Priyanka

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்சி ஒரு பக்கம் கலகலப்பாகவும், மற்றொரு பக்கம் சர்ச்சையில் சிக்கி ஒரு வழியாக தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சர்ச்சைக்கு முக்கிய விஷயமே மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை தான். இந்த பிரச்சினையில் மணிமேகலை ரசிகர்கள் குக் வித் கோமாளியை வெறுக்கும் அளவுக்கு யோசித்துவிட்டார்கள்.

ஒரு பக்கம் இந்த பிரச்சினை நடந்து வந்தாலும், மற்றொரு பக்கம் நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வந்து தற்போது, நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. இறுதிப்போட்டியில், பிரியங்கா தான் வெற்றிபெற்று டைட்டிலை தட்டிச்சென்றார் என்கிற விஷயம் முன்னதாகவே, வெளி வந்துவிட்டது. ஆனால், அதிகாரப்பூர்வமாக இப்போது தான் தெரிய வந்திருக்கிறது.

இறுதிப்போட்டியில், VTV கணேஷ், ஷாலினி சோயா, பூஜா வெங்கட், முகமது இர்ஃபான், சுஜிதா தனுஷ், பிரியங்கா ஆகியோர் போட்டியிட்டனர். இதில், அட்டகாசமாக thai dish செய்து அனைவருடைய பாராட்டைப் பெற்று பிரியங்கா டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை சுஜாதா பிடித்தார்.

பிரியங்கா டைட்டில் வென்றதைத் தொடர்ந்து அவருக்கு நிகழ்ச்சியிலிருந்த பிரபலங்கள், வெளியே ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், அவருக்குப் பரிசாக எவ்வளவு ரூபாய் வழங்கப்பட்டது என்பது பற்றிய தகவலும் கிடைத்துள்ளது. அதன்படி, டைட்டில் வென்ற பிரியங்காவுக்குப் பரிசாக 5 லட்சம் ரூபாய்க்கான கூப்பன் வழங்கப்பட்டது.

மேலும், இறுதிப்போட்டியில் பிரியங்காவுக்குக் கோமாளியாக இருந்த ராமருக்கும் 1 லட்சம் ரூபாய்க்கான கூப்பன் வழங்கப்பட்டது, அதைப்போல, இரண்டாம் இடம் பிடித்த சுஜிதாவுக்கும் 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
Train Accident
Optimus Gen-2
MSDhoni
Kavarepet Train Accident - Madurai MP Su Venkatesan
Indian Squad for NZ
Thoothukudi Perumal Temple