Ajith Kumar: ஏவிஎம் அருங்காட்சியகத்தில் அஜித் ஓட்டிய பல்சர் பைக்!

திருப்பதி படத்தில் நடிகர் அஜித் ஓட்டிய (பல்சர் 180cc 2014) மாடல் பைக்கை ஏவிஎம் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஏவிஎம் நிறுவனம் என்பது பழம்பெரும் மற்றும் பெரிய திரைப்பட உருவாக்க நிலையம் ஆகும். இந்த நிலையம் தற்போது எம். சரவணனாலும் அவரது மகனான எம்.எசு.குகனாலும் நடத்தப்படுகின்றது.
மேலும், சென்னை வடபழனி உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் அமைந்துள்ள பாரம்பரிய அருங்காட்சியகத்தை ஏவிஎம் சரவணனின் மகன் எம்எஸ் குஹன் உருவாக்கினார். இந்த அருங்காட்சியகத்தை கடந்த மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இங்கு 1960 காலகட்டத்தில் இருந்து இன்று வரை தமிழ் திரைப்படங்களில் வெளிவந்த 40க்கும் மேற்பட்ட கார்கள் மற்று இருசக்கர வாகனங்கள் இந்த அருங்காட்சியகம் சினிமா பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாக உள்ளது. மேலும், பழமையான கேமராக்கள், படத்தில் நடித்த சினிமா பிரபலங்கள் பயன்படுத்திய வாகனங்கள், ஆடைகள் பொதுமக்களுக்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது, நடிகர் அஜித்குமார், ‘திருப்பதி’ படத்தின் பல்சர் (180cc) 2014 மாடல் பைக்கை அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இப்போது, இந்த தகவல் மற்றும் புகைப்படங்கள் தற்போது அஜித் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
As we all know, #AK & bikes have always been something special… #AjithKumar Sir fans, you’re in for a treat. The Bajaj Pulsar 180CC 2004, used by him in @avmproductions‘ ‘Thirupathi’ is now the latest addition to #AVMHeritageMuseum ❤️????@arunaguhan_ @avmmuseum @RIAZtheboss pic.twitter.com/C5zTrCuF4o
— AVM Productions (@avmproductions) September 16, 2023
எற்கனவே, கே.வி.ஆனந்த் இயக்கிய சூப்பர்ஹிட் படமான ‘அயன்’ படத்தில் நடிகர் சூர்யா ஓட்டிய பைக்கும், ‘பிரியமான தோழி’ படத்தில் நடிகர் மாதவன் ஓட்டிய பைக்கும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அருங்காட்சியகம் புதன்கிழமை முதல் திங்கள் வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும் மற்றும் செவ்வாய் மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் மூடப்படும்.