Pushpa 2 The Rule The Couple Song song [file image]
புஷ்பா 2 : தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் புஷ்பா 2 படத்தின் இரண்டாவது பாடலான ‘சூடானா’ (கப்புள் சாங்) பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பிய திரைப்படம் தான் புஷ்பா. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுகுமார் இரண்டாவது பாகத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரண்டாவது பாகத்திலும், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஸ்ரீதேஜ், அனசுயா பரத்வாஜ், திவி வத்யா, ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், படத்தில் இருந்து அப்டேட்டுகள் வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், ஏற்கனவே படத்தின் முதல் பாடலான புஷ்பா..புஷ்பா பாடல் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று கொண்டு உலகம் முழுவதும் பலரும் ரீல்ஸ் செய்து வீடியோக்களை வெளியீட்டு கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில், படத்தின் இரண்டாவது பாடல் ‘சூடானா’ (கப்புள் சாங்) இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.
அதன்படி, தற்போது அந்த பாடல் வெளியாகி இருக்கிறது. பாடலில் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடனமாடிய சில காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. அதைப்போல, பாடலில் வரும் இசையையும் ரசிகர்களை ஆட்டம் போடும் வகையில் இருக்கிறது. எனவே, முதல் பாடலை போலவே இந்த இரண்டாவது பாடலும் மிகப்பெரிய ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…