Vijay - Rajinikanth [file image]
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்திற்கு ‘வேட்டையன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் பிறந்தநாளையொட்டி நேற்றைய தினம் இப்படத்தின் தலைப்பு டீசர் வெளியிடப்பட்டது.
ஜெய்பீம் படத்திற்கு பிறகு ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை வெளியான இந்த தலைப்பு டீசரில் அனிருத் உடைய பின்னணி இசை வருகிறது. அத்துடன் ரஜினி சுபாஷ் சந்திர போஸ் புகைப்படம் இருக்கும் புத்தம் ஒன்றை படிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும், இதில் “குறி வெச்சா – இறை விழணும்” என்ற டயலாக் இடம்பெற்றிருக்கும்.
இந்த வசனம் தற்பொழுது விவாதத்தை கிளப்பியுள்ளது, அதவாது நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக நடித்து ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினி கூறிய குட்டி கதை தான் அதற்கு காரணம். அப்போது அவர் பேசுகையில், ‘காகம் மற்றும் கழுகு இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது, கழுகு கீழே இருக்கும் போது காகம் அதனை தொந்தரவு செய்யும் ஆனால், கழுகு பறக்கும் அளவிற்கு என்ன முயற்சி செய்தாலும் காகத்தால் பறக்கவே முடியாது” என தெரிவித்திருந்தார்.
காக்கா-கழுகு கதையால் யாருக்கும் பயனில்லை.! லெஜண்ட் செய்த சம்பவத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…
விஜய்யை தாக்கி தான் ரஜினி இப்படி பேசி இருக்கிறார் என நெட்டிசன்கள் தகவல்களை பரப்பினார்கள். இதனால், ரஜினி – விஜய் தரப்பு ரசிகர்களுக்கும் இடையே வாக்கு வாதமும் நடந்தது. இதனையடுத்து, லியோ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய தளபதி விஜய், ஒரு காட்டுல யானை, புலி, மான், காக்கா, கழுகுன்னு நிறைய மிருகங்கள் இருந்துச்சுனு, பெரிய இலக்கை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
கழுகு பசித்தால் கீழே வந்து தான் ஆகணும்…ரஜினியை கலாய்த்தாரா ரத்னகுமார்?
இதையடுத்து, முதலில் ரஜினி சொன்னதற்கும் அதனை தொடர்ந்து விஜய் சொன்னதற்கும் சரியா போச்சு என்று இந்த விவகாரம் முடிந்த நிலையில், மீண்டும் ரஜினிகாந்த் தான் நடிக்கும் 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் கழுகு கதை பற்றி பேசியது சமூக வலைத்தளங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது ரஜினி தனது ரசிகர்களை வியக்க வைக்க செய்கிறாரா இல்லை யாரையும் தாக்கி பேசுகிறாரா என்று தெரியவில்லை. ஆனால், இந்த விவகாரம் கடைசியில் ரஜினி – விஜய் ரசிகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…