vettayan trailer [file image]
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி இருக்கிறது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி திரைக்கு வர இருக்கும் திரைப்படம் தான் வேட்டையன்.
இந்நிலையில், வேட்டையன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை 7 மணிக்கு தொடங்கியது. அந்த விழாவில் தற்போது வேட்டையன் திரைப்படத்தின் டீசர் அதாவது ப்ரவ்யூ ரிலீசாகி இருக்கிறது. அந்த டீசரில், ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக துப்பாக்கி எடுத்து மிரட்டும் காட்சிகள் மாஸ்ஸாக இருக்கிறது.
அதிலும், அனிருத்தின் மிரட்டும் இசை ரஜினியின் நடைக்கும், வசனத்திற்கும் ஏற்றவாறு அமைந்திருப்பது படத்திற்கு மேலும் ஒரு பலமாக அமையும் என எதிரிபார்க்கப்படுகிறது. ரஜினி-அனிருத் கூட்டணி என்றாலே அதற்கு ஒரு தனி எதிர்பார்ப்பு என்பது இருக்கும்.
மேலும் இந்த டீசரை பார்க்கும் போது, போலீஸ் என்கவுண்டர் அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் எதற்காக என்கவுண்டர் செய்கிறார்கள்? என ஒரு போலீஸ் வாழ்க்கையில் ஏற்படும் முக்கியமான ஒரு அம்சத்தை கதைக்களமாக உருவாக்கியது போல் அமைந்துள்ளது இந்த படத்தின் டீசர்.
மேலும், இந்த டீசரில் அமிதாப்பச்சன், அபிராமி, பகத் ஃபாசில், ராணா போன்ற சக நடிகர்கள் வரும் காட்சிகள் மேலும் இந்த டீசருக்கு மெருகேற்றி இருக்கிறது என்றே கூறலாம். அதிலும், குறிப்பாக நடிகர் அமிதாபத்-ரஜினி இருவரையும் பார்க்கும் போது எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கிறது.
மேலும், நடிகர் அமிதாப் பச்சனுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழில் டப்பிங் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கு தேவையான அடுத்த கட்ட கதையை சரியாக இந்த வேட்டையன் படத்தின் மூலம் இயக்குனர் ஞானவேல் கூறினால் ஜெய்பீம் படத்தை தொடர்ந்து இந்த வேட்டையன் திரைப்படமும் வெற்றி பெரும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…