பிரபல சீரியல் ஜோடி நிஜத்தில் தம்பதிகளாக மாறினர்.! வைரலாகும் கலக்கல் போட்டோஸ்….

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திருமணம் சீரியலில் நடித்திருந்த சித்து – ஷ்ரேயா அஞ்சன் ஜோடி திருமணம் செய்துகொண்டனர்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் எனும் சீரியல் மூலம் பரிட்சயமான ஜோடி தான், சித்து – ஷ்ரேயா அஞ்சன். இவர்கள் நடித்த அந்த திருமணம் சீரியலில் இருவரது கெமிஸ்ட்ரியும் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டது. அப்போதே இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. அதனை இருவரும் உறுதியும் செய்தனர்.
தற்போது அவர்களது திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதற்கு முந்தைய நாள் மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்று நண்பர்கள், சுற்றத்தார் சந்தானம் பூசி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
தற்போது இருவரது திருமண போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியல் ஜோடிகளான சித்து – ஸ்ரேயா அஞ்சன் தற்போது நிஜத்தில் தங்கள் திருமண பந்த வாழ்வை தொடங்கியுள்ளனர்.
சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025