‘முஸ்தஃபா முஸ்தஃபா …’ அமரன் ஷூட்டிங்கில் ரஹ்மான் பாடலுக்கு வைப் செய்த சிவகார்த்திகேயன்!

அமரன் திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது சக நடிகருடன் சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு வைப் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

SK - Bhuvan Arora

சென்னை : நேற்று தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள், குடும்பங்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம். மேலும், மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியாகி இருக்கிறது, மேலும் முதல் நாளில் உலகளவில் ரூ.42 கோடி வரை வசூல் செய்துள்ளது எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ வரலாகப் பரவி வருகிறது. அது என்னவென்றால் படத்தின் ஷூட்டிங்கின் போது சிவகார்த்திகேயனும், அவருடன் படத்தில் இணைந்த நடித்த சக ஹிந்தி நடிகரான புவன அரோராவும் ஒன்றாக பைக்கில் பாட்டுப் பாடிக் கொண்டு செல்லும் வீடியோ தற்போது வரலாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் புவன, பிரண்ட்ஷிப் பாடலான ‘ஏ தோஸ்து கி‘ எனும் ஹிந்தி பாடல் ஒன்றைப் பாட, அதைப் பின் தொடர்ந்து சிவகார்த்திகேயனும் காதல் தேசம் படத்தில் இடம்பெற்ற ப்ரண்ட்ஷிப் பாடலான ‘முஸ்தஃபா முஸ்தஃபா’ எனும் பாடலை பாடுவார்.

அதைப் பார்க்கும் போது இருவருக்கும் இடையே அவ்வளவு அழகான நட்பு இருப்பதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். அமரன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட நல்ல அனுபவங்களைப் படக்குழு ஒரு வீடியோ தொகுப்பாக வெளியிடுவார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
Mr. Subramanian
csk dhoni
Chennai Super Kings vs Punjab Kings ipl
retro
Chennai Super Kings vs Punjab Kings