leo vijay theatre [File Image]
இலங்கையில் வரும் 20-ஆம் தேதி லியோ திரைப்படத்தை திரையிட வேண்டாம் என்று இலங்கை தமிழ் எம்பிக்கள் செல்வம், அடைக்கலநாதன், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், தங்களது லியோ திரைப்படம் இம்மாதம் 19ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இலங்கையில் வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தங்களது நடிப்பில் உருவாகும் திரைப்படங்களை எங்கள் தமிழர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். அதேவேளை இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் உங்களின் ரசிகர்களாகவும் இருக்கிறார்கள்.
அண்மையில் முல்லை தீவு மாவட்ட நீதிபதி திரு.சரவணன் ராஜா அவர்கள் மீதான இலங்கை அரசின் அழுத்தத்தினாலும், உயிர் அச்சுறுத்தலினாலும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் நீதி கோரி பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த மாதம் இருபதாம் தேதி வடக்கு கிழக்கில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த நாளில் தங்களது திரைப்படம் வெளிவருவது எங்களது போராட்டத்திற்கு பின்னடைவாகவே இருக்கின்றது. அத்துடன் அது ஈழத் தமிழர்களை அவமதிக்கும் செயல்பாடாகவே இருக்கும்.
ஈழ தமிழர்களுக்கும் உங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதனாலும், பல லட்சக்கணக்கானோர் உங்களுக்கு ரசிகர்களாகஇருப்பதனாலும், லியோ திரைப்படக் காட்சிகளை இந்த மாதம் 20ஆம் தேதி இலங்கையில் நிறுத்தி வைக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…