பெங்களூரை சேர்ந்த சௌமியா எனும் ரசிகை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வீடியோ மூலம் ஆறுதல் வார்த்தை கூறி தேற்றியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் உடல் னால குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிந்தால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவர்களின் இஷ்ட தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் எடுக்கும் அளவிற்கு எல்லையில்லா அன்பை பொழியும் ரசிகர்கள் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அதே போல, ரஜினிகாந்த் எந்த மேடையில் ஏறினாலும், என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய என் ரசிகர்கள் என்றே கூறி ஆரம்பிப்பார். ரசிகர்கள் நலனுக்காக பல்வேறு உதவிகள் செய்து வருவார்.
அண்மையில், பெங்களூருவை சேர்ந்த சௌமியா எனும் ரஜினி ரசிகை ஒருவர் நோய் வாய்ப்பட்டு இருந்துள்ளார். அவர் ரஜினியை சந்திக்க வேண்டும் என தனது ஆசையை கூறியுள்ளார். சௌமியாவின் தந்தை ஒரு வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட, அதனை பார்த்த நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி வீடியோ மூலம் அந்த ரசிகையை நலம் விசாரித்துள்ளார்.
அவர் பேசிய அந்த கள்ளம் கபடமில்லா பேச்சில் சிலவை, ‘ ஹலோ சௌமியா எப்படி இருக்க? நல்ல இருக்கனும். உனக்கு ஒன்னும் ஆகாதுகண்ணா, தைரியமாக இரு. பயப்படாதமா. சாரி கண்ணா கொரோனா காலம்ங்கிறதால என்னால உன்ன இப்போ நேர்ல பக்க முடியல. எனக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்ல. உனக்காக நா பிரே பண்ணுறேன். ஆண்டவன் இருக்கான் உனக்கு ஒன்னும் ஆகாது. இல்லனா நேர்ல வந்து பாத்து இருப்பேன்.’ என தனது ஆறுதல் வார்த்தைகள் மூலம் சௌமியாவுக்கு சிறிய சந்தோசத்தை அளித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…