சூர்யா போட்ட மாஸ்டர் பிளான்? கோட் படத்துக்கு முன்பே கங்குவா டிரைலர்!!

the greatest of all time vijay kanguva

கங்குவா : இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் என்றால் விஜய் நடித்துள்ள கோட் மற்றும் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தினை கூறலாம். இதில் கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைப்போல, அதற்கு அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 10-ஆம் தேதி கங்குவா திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த சூழலில், கோட் படம் தான் முதலில் வெளியாகவுள்ளது. ஆனால், இன்னும் இந்த படத்திற்கான டிரைலர் கூட வெளியாகவில்லை. அதற்கு முன்னதாகவே சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் டிரைலர் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கங்குவா படத்தின் டிரைலர் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

Kanguva Trailer
Kanguva Trailer / @StudioGreen2

பொதுவாகவே சமீபகாலங்களில் எல்லாம் படம் வெளியாகும் 2 வாரங்கள் அல்லது 1 வாரங்களுக்கு முன்பு தான் படத்தினுடைய டிரைலரை வெளியீட்டு வருகிறார்கள். ஆனால், கங்குவா படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தின் டிரைலரை வெளியீடுவதாக அறிவித்துள்ளனர். அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது என்னவென்றால், படம் கிட்டத்தட்ட 38 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

எனவே, படம் வெளியாகும் இரண்டு மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் செய்யலாம் என்கிற பேச்சுவார்த்தை நடந்து சூர்யாவும் அதற்கு சம்மதம் தெரிவித்த காரணத்தால் இந்த அறிவிப்பு வெளிவந்து இருக்கிறது. கோட் படம் வெளியாவதற்கு முன்னதாகவே, கங்குவா டிரைலர் வெளியாகவுள்ள காரணத்தால் கண்டிப்பாக கோட் படத்தின் இடைவெளி காட்சியில் கங்குவா டிரைலர் ஒளிபரப்பாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

கோட் படம் மட்டுமின்றி அடுத்ததாக கங்குவா படம் வெளியாவதற்கு  முன்பு வரை என்னென்ன படங்கள் எல்லாம் வெளியாகிறதோ அந்த படங்களின் இடைவெளி காட்சியில் கங்குவா டிரைலர் ஒளிபரப்பு செய்யப்படும். இதுவும் ஒரு வகையில் படத்தினை ப்ரோமோஷன் செய்ய உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 27032025
o panneerselvam edappadi palanisamy
James Franklin srh 2025
CM MK Stalin
veera dheera sooran issue dhc
Edappadi K. Palaniswami o panneerselvam
shane watson