சினிமா

பயங்கரமான சாபக்கல்! என்ன பாத்தா இளிச்சவாயன் மாதிரி இருக்கா? கொந்தளித்த கூல் சுரேஷ்!

Published by
பால முருகன்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் விறு விறுப்பாக  ஒளிபரப்பாகி வரும் நிலையில், வித்தியாச வித்தியாசமாக பல டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (அக் 18) பிக் பாஸ் ஒரு கல் ஒன்றை கொடுத்து அந்த கல்லிற்கு “சாபக்கல்” என்று பெயர் கொடுத்து அதனை ஒரு போட்டியாளர்களுக்கு கொடுக்கவேண்டும் போட்டியாளர்கள் தங்களுடைய மனதில் இந்த கல்லை யாருக்கு கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் பெயரை கூறவேண்டும் என்று டாஸ்க் கொடுத்தது.

அது மட்டுமின்றி, இந்த சாபக்கல் யாரிடம் கொடுக்கப்படுகிறதோ அவர் நேரடியாக ஸ்மால் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டு அடுத்த வாரம் நேரடியாக எந்த வாக்குகள் இல்லாமல் நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடிப்பார்கள் என அறிவித்துவிட்டது. இதனையடுத்து, வீட்டில் இருந்த பலரும் கூல் சுரேஷ் தான் என கூறினார்கள்.

எனவே, போட்டியாளர்கள் கொடுத்த வாக்கு அடிப்படையில் கூல் சுரேஷ் பெயரை பலரும் கூறிய காரணத்தால் அவருக்கு இந்த சாபக்கல் கொடுக்கப்பட்டது. அனைவரும் திடீரென கூல் சுரேஷ் பக்கம் திரும்பிய காரணத்தால் சற்று அதிர்ச்சியாகி கூல் சுரேஷ் சோகம் அடைந்தார். பிறகு பிக் பாஸ் இந்த சாபக்கல் உங்களுக்கு தான் கூல் சுரேஷ் என்று கூறினார்.

கடந்து வந்த பாதை டாஸ்க் : ‘காலையில் பேப்பர் போட போவேன்’…கதறி அழும் கூல் சுரேஷ்!

பிறகு சாபக்கல்லை எடுக்கும்போது கடுப்பான கூல் சுரேஷ் இந்த வீட்டில் என்னை பார்த்தால் மட்டும் தான் இளிச்சவாயன் மாதிரி இருக்கா?  இந்த கல்லை நானே எடுத்துக்கொள்கிறேன் என கத்தி பேசுகிறார். இதுவரை வாயை திறக்காமல் இருந்த கூல் சுரேஷ் திடீரென கொந்தளித்து பேசியதை பார்த்த வீட்டில் இருந்த சக போட்டியாளர்கள் மிகவும் பயந்துவிட்டார்கள்.

இன்று வெளியான ப்ரோமோவில் கூல் சுரேஷ் கோபத்துடன் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதுவரை எந்த பிரச்சனைக்கும் வாயை திறக்காமல் அமைதியாக பாதுகாப்பாகவும் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறாமல் இருந்த கூல் சுரேஷ் அடுத்த வாரம் நேரடியாக நாமினேஷன் லிஸ்டில்  இடம்பெற்றுள்ள காரணத்தால்  நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

9 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

10 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

12 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

12 hours ago