சிறகடிக்க ஆசை சீரியல்.. ரோகிணி போட்ட பிளானை சொதப்பிய வித்யா..

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் [செப்டம்பர் 30] முத்துவின் செல்லை வாங்கி சத்யா பற்றிய வீடியோவை வெளியிட முயற்சி செய்கிறார் வித்யா..

Rohini,vithya (1)

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் [செப்டம்பர் 30] முத்துவின் செல்லை வாங்கி சத்யா பற்றிய வீடியோவை வெளியிட முயற்சி செய்கிறார் வித்யா..

முத்துவிடம் சிக்கியது பிஏ வின் வீடியோ ;

ரோகிணி வித்யா கிட்ட அந்த பிஏ பண்ண வேலைய பாத்தியாடி.. இதிலேயே அந்த முத்துக்கு சந்தேகம் வந்துருச்சு அவன்  மேல பழி போட்டதனால ஈஸியா  யாருன்னு கண்டுபிடிச்சுருவான் .. இதுக்கு ஒரே வழி அந்த சத்யாவோட வீடியோவை ரிலீஸ் பண்ணனும் அப்பத்தான் சிட்டி  நமக்கு ஹெல்ப் பண்ணுவான் அப்படின்னு சொல்றாங்க.. வித்யாவும் அடுத்து என்னடி பண்றதுன்னு கேட்க அதுக்கு ரோகிணி சொல்றாங்க நீ முத்துவோட கார்ல சவாரி போற மாதிரி போயி எப்படியாவது செல்ல வாங்கி அந்த வீடியோவை எனக்கு அனுப்பி வை . இப்போ வித்யாவும் சரின்னு சொல்லிடறாங்க. இன்னொரு பக்கம் முத்து அந்த சாமியாரை தேடி கோவிலுக்கு போறாரு அங்கே விசாரிக்கும் போது  அவன் ஒரு பிராடு தம்பி நிறைய பேர் கிட்ட அன்னதானம் போடணும் கும்பாபிஷேக வைக்கணும்னு பணம் பறிச்சிட்டு இருந்தான் அவன பத்தி விசாரிச்சதுல  பிராடுன்னு  தெரிஞ்சு  ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து அடிச்சிட்டாங்க.

முத்து சொல்லுறாரு  அந்த வீடியோ இருந்தா எனக்கு காட்டுறீங்களா  இப்ப அந்த வீடியோவை பார்த்த முத்துக்கு அண்ணே இவன் சரியான பொறுக்கி நானே  போலீஸ்ல புடிச்சு கொடுத்திருக்கிறேன் அப்படின்னு சொல்றாரு. இப்போ   முத்துக்கு   சவாரி வருது  அவரும் பிக்கப் பண்ண போறாரு .அங்க போய் பார்த்தா வித்யா தான் வர சொல்லி இருக்காங்க. இப்ப முத்துவும் நீங்கதானா நான் கூட வேற யாரோனு  நெனச்சேன் சரி வந்து உட்காருங்க அப்படின்னு சொல்றாரு  .வித்யாவும் மெதுவா முத்து கிட்ட பேச்சு கொடுக்குறாங்க அப்படியே என் செல்லு கொஞ்சம் சார்ஜ் போயிருச்சு உங்க செல்ல கொடுத்தீங்கன்னா என் பிரண்டுக்கு ஒரு கால் பண்ணிட்டு  தரேன்னு கேட்க முத்துவும் கொடுக்கிறார் .இப்போ வித்யா அந்த வீடியோவை எப்படியோ தேடி கண்டுபிடிச்சு  சரி இப்பவே  ரோகிணிக்கு அனுப்புவோம்னு அனுப்ப போகயில மீனா கால் பண்ணிடறாங்க.

முத்து மீனாவை பார்த்து வியந்த வித்யா ;

muthu,manoj (2) (1)

முத்து  எனக்கு கால் வருது நான் பேசிட்டு தரேன்னு சொல்றாங்க. இப்ப பேச ஆரம்பிக்கிறாங்க பேசிட்டு இருக்காங்க ..ரெண்டு பேரும் ரொம்ப ரொமான்டிக்கா  பேசிட்டு இருக்காங்க .. பேசிக்கிட்டே வித்தியா இறங்க வேண்டிய இடமும் வந்துருது இப்ப வித்யா இறங்கி ரோகினிக்கு கால் பண்றாங்க .. சொதப்பிருச்சுடின்னு ரோகிணி  ரோகிணி டென்ஷனா ஆயிடுறாங்க. அப்புறம்  வித்யா அந்த முத்துவும்  மீனாவும் ரொம்ப ரொமான்டிக்கா பேசிட்டு இருந்தாங்கடி எனக்கு உன்னையும் மனோஜையும் பார்த்தா கூட கல்யாண ஆசை வந்ததில்லை ஆனா இவங்க ரெண்டு பேரும் பேசுனத கேட்டு கல்யாண ஆசை வந்துடுச்சு அப்படின்னு சொல்றாங்க .ரோகிணி சொல்லுறாங்க  நானே டென்ஷன்ல இருக்கேன் நீ வேற  அவார்ட் கொடுத்துட்டு இருக்கியா அப்படின்னு போன வைக்க போறாங்க ஏய் இருடி ஒரு நிமிஷம் அப்படின்னு முத்து அந்த பிஏ வ   கண்டுபிடிச்சிட்டாராம்.

ரோகிணி ஷாக்காயிடுறாங்க.. இப்ப எல்லாருமே வீட்ல சாப்பிட்டுட்டு இருக்காங்க ரோகிணி  மட்டும் சாப்பாட வச்சிட்டு யோசிச்சிட்டு இருக்காங்க விஜயா  கேக்குறாங்க என்னமா ரோகிணி சாப்பிடாம என்ன பண்ணிட்டு இருக்கேனு.. இப்ப அந்த டைம்ல முத்து வராரு டேய் ஓடுகாலி   உன்னை மிரட்டுன அந்த சாமியார நான் கண்டுபிடிச்சிட்டேன் அப்படின்னு பிஏவ பத்தி எல்லா உண்மையும் சொல்லிட்டு இருக்காரு  இதோட இன்னைக்கு எபிசோடை முடிச்சு இருக்காங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
Train Accident
Optimus Gen-2
MSDhoni
Kavarepet Train Accident - Madurai MP Su Venkatesan
Indian Squad for NZ
Thoothukudi Perumal Temple