புஷ்பா 2-வில் நடிக்க ராஷ்மிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published by
பால முருகன்

Rashmika Mandanna : புஷ்பா 2-வில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா  வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் கலக்கி கொண்டு இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் கடைசியாக விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே புஷ்பா முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். இந்த இரண்டாவது பாகத்திலும் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு கூட ஒரு அட்டகாசமான போஸ்டரும் வெளியாகி இருந்தது.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில்  , படத்தில் நடிகை நடிகை ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த புஷ்பா 2 படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பளமாக 3 லிருந்து 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே புஷ்பா முதல் பாகத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா சம்பளமாக 1 கோடிக்கு மேல் வாங்கி இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது புஷ்பா 2வில் நடிக்க அவர் சம்பளமாக 5 கோடி வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Recent Posts

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…

27 minutes ago

கோவா கோயில் திருவிழா.., கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…

2 hours ago

எல்லை மீறும் பாகிஸ்தான்., 9வது நாளாக தொடரும் காஷ்மீர் எல்லை தாக்குதல்!

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

2 hours ago

Live : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…

3 hours ago

கோவா கோயில் துயரம்.. முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு.!

கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…

4 hours ago

வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று பெங்களூருடன் மோதல்.!

பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…

4 hours ago