HBDMysskin: மிஷ்கின் இசையில் “கடவுளுக்கு கோரிக்கை” பாடல் வெளியீடு!

Devil - Kadavulukku Korikkai

இயக்குனர் மிஷ்கின் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாதி வருகிறார். இவர் இயக்கத்தை தாண்டி, இவரது நடிப்பும் தனித்துவமாக இருக்கும் என்றே சொல்லலாம். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, மிஷ்கின் இசையமைத்த பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழில் ‘சவரக்கத்தி’ என்ற திரைப்படத்தை தயாரித்து மிகவும் பிரபலமான ஆதித்யா ‘டெவில்’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் ஆதித்யா இயக்குனராக இயக்குனர் மிஷ்கின், இதன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தில் விதார்த், பூர்ணா முக்கிய வேடத்தில் நடிக்க, ஆதித் அருண் மற்றும் சுபாஸ்ரீ ராயகுரு ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச்ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் எஸ் ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ் ஹரி இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் மிஷ்கின் இசையமைப்பதோடு ஒரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மிஷ்கின், இப்படத்தின் மூலம், முதல் முறையா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்நிலையில், இவரது இசையில் பாடல்கள் எவ்வாறு இருக்கிறது என்று பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே, இப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலான ‘கலவி பாடல்’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இப்படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலான ‘கடவுளுக்கு கோரிக்கை’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

இதன் இசையும், பிரியங்காவில் பாடலும் நன்றான அமைந்துள்ளது. இதன் பாடல் வரிகளையும் மிஷ்கின் தான் எழுதியுள்ளார்.  முன்னதாகவே, இப்படத்தின் படபிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்