Dhruva Natchathiram 2 : படம் நல்லா இருக்கு...பார்ட் 2 எடுங்க நான் நடிக்கிறேன்! சியான் விக்ரம் கொடுத்த வாக்குறுதி!'

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில்

chiyan vikram

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’ . இந்த திரைப்படத்தை கெளதம் மேனனே தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நீண்ட ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.  படத்திற்கான டப்பிங் வேலைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், தன்னுடைய டப்பிங் அனைத்தையும் விக்ரம் பேசி முடித்து கொடுத்தார். அதனை தொடர்ந்து படத்தில் இருந்து பாடல்கள் அனைத்தும் வெளியானது.

இருப்பினும் இன்னும் படத்திற்கான ரிலீஸ் தேதி தான் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், சமீபத்தில் நடிகர் விக்ரம் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை முழுவதுமாக பார்த்தாராம். பார்த்தவுடன் இந்த படம் நன்றாக ஓடும் என்கிற நம்பிக்கை அவருக்கு வந்துள்ளதாம். இதனையடுத்து, முதல் பாகம் நல்ல வெற்றியை பெற்றால் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதையை தயார் செய்யுங்கள் என கெளதம் மேனனிடம் விக்ரம் கூறியுள்ளாராம்.

அது மட்டுமின்றி படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்துவிட்டால் அதனுடைய இரண்டாவது பாகத்தில் கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்ற வாக்குறுதியும் விக்ரம் கொடுத்திருக்கிறாராம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரமே படத்தை பார்த்துவிட்டு படம் ஹிட் ஆகும் என நம்பி இரண்டாவது பாகத்தில் கூட நடிப்பதாக கூறியுள்ள தகவலை பார்த்த ரசிகர்களுக்கு ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

மேலும், நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.