அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

விடாமுயற்சி படம் எதிர்பார்த்த அளவுக்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெறவில்லை கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் லைக்கா நிறுவனம் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்.

VidaaMuyarchi box office

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும், படம் அஜித் படம் என்பதால் படத்திற்கு வசூல் ரீதியாக பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என ரசிகர்கள் மற்றும் படத்தினை தயாரித்த லைக்கா நிறுவனமும் எதிர்பார்த்திருந்தது.

ஆனால், தமிழகத்தில் மொத்தமாக முதல் நாளில் மட்டும் இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் 25 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாகவும், உலகம் முழுவதும் 50 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவலை தெரிவிக்கும் இணையத்தளங்களில் மற்றும் திரைத்துறையில் இருக்கும் பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் கூறியுள்ளார்.

அஜித் ரசிகர்கள் மட்டும் தமிழகத்தில் படம் 40 கோடி  ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், உலகம் முழுவதும் 78 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக கூறிவருகிறார்கள். இன்னும் தயாரிப்பு நிறுவனமாக லைக்கா நிறுவனம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, நிறுவனம் அறிவித்தால் மட்டும் தான் உண்மையான வசூல் என்ன என்பது பற்றிய தகவல் தெரியவரும்.

இருப்பினும் இதுவரை பாக்ஸ் ஆபிஸ் தகவலை தெரிவிக்கும் இணையதளங்கள் கொடுத்த தகவலின் படி விடாமுயற்சி படம் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்கிற விவரத்தை பற்றி பார்க்கலாம்..

வழக்கமாக பாக்ஸ் ஆபிஸ் தகவலை தெரிவிக்கும் Sacnilk.com-வெளியிட்டுள்ள தகவலின் படி, ‘விடாமுயற்சி’ இந்தியாவில் முதல் நாளில் ரூ.22 கோடி நிகரமாக வசூலித்துள்ளது. இது அஜித் குமாரின் முந்தைய படமான ‘துணிவு’வின் முதல் நாள் வசூலான ரூ.24.4 கோடிக்கு விட குறைவு எனவும் தெரிவித்துள்ளது.

Pinkvilla: ‘விடாமுயற்சி’ திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் ரூ. 25.50 கோடி வரை வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இப்படி குழப்பான தகவல் பரவி வருவதன் காரணமாகவே விரவில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், படம் எதிர்பார்த்த அளவுக்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெறவில்லை கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் லைக்கா நிறுவனம் அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த படத்திற்கு முன்பு லைக்கா தயாரிப்பில் வெளியான இந்தியன் 2, சந்திரமுகி 2, லால் சலாம், வேட்டையன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது.

எனவே, விடாமுயற்சி படம் எப்படி ஆகிவிடக்கூடாது படத்திற்கு செலவு செய்து எடுக்கப்பட்ட தொகையை மீட்டெடுக்க வேண்டும் என லைக்கா காத்திருக்கிறார்கள். விடாமுயற்சி படம் 220 கோடிகளுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nagpur Violence -Sunita Williams LIVE
sunita williams pm modi
premalatha vijayakanth edappadi palanisamy
BJP State President Annamalai say about Nellai Rtd Police murder
ADMK Former Minister Sellur Raju
chennai corporation - dog
PM Modi says about Maha Kumbh mela 2025