Kanguva [file image]
சென்னை : கங்குவா படம் வெளியான பிறகு ஒரு மாதம் படத்தை பற்றி தான் உலகம் முழுவதும் பேசுவார்கள் என தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
சூர்யா நடித்து வரும் கங்குவா படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஆக 12-ஆம் தேதி படத்திற்கான டிரைலர் வெளியானது. டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் வசனங்கள் என அனைத்தும் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது.
படத்தில் இருந்து வெளியாகும் அப்டேட்கள் ஒரு பக்கம் படத்திற்கு ப்ரோமோஷனாக அமைந்து வரும் நிலையில், படத்தை பற்றி பிரபலங்களும் பேசி இன்னும் படத்தை அதிக அளவில் ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். அந்த வகையில், பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் கங்குவா படம் குறித்து பேசி பில்டப்பை கிளப்பி இருக்கிறார்.
சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் அவர் பேசியதாவது ” கங்குவா படத்தை பற்றி என்னால் உறுதியாக சொல்ல கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் படம் வெளியான பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் உலகம் முழுவதும் அந்த படத்தை பற்றி தான் பேசுவார்கள்” என கூறினார். இவர் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் ஹாலிவுட் மார்வெல் படங்களுக்கு கூட இப்படி ஒரு பில்டப் இருந்திருக்காது.. நம்மாளுங்க பில்டப் பண்ணுவதற்கு மட்டும் தான் என கலாய்த்து வருகிறார்கள்.
மேலும் அந்த பேட்டியில் தொடர்ந்து பேசிய தனஞ்செயன் ” இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கங்குவா படம் பேசப்படும் ஏனென்றால் அந்த அளவுக்கு இயக்குனர்கள், படத்தில் நடித்த பிரபலங்கள், இசையமைப்பாளர் என அனைவரும் நன்றாக உழைத்துள்ளார்கள். அவர்களின் உழைப்பும் பேசப்படும் ” எனவும் வெளிப்படையாகவே பேசினார். நெட்டிசன்கள் கலாய்ப்பதை பார்த்த சூர்யா ரசிகர்கள் படம் வரட்டும் சார் அது வரை இப்படி பேசவேண்டாம் எனவும் கூறிவருகிறார்கள்.
டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…
யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது. இதில் பலர்…
சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…