விஜய் சேதுபதியின் 50-வது படம் இது தான்! போஸ்டருடன் அறிவித்த படக்குழு..!

விஜய் சேதுபதி நடிக்கும் 50-வது படத்திற்கு மகாராஜா என பெயரிடப்பட்டுள்ளது.
குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘மகாராஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜன், முனிஸ்காந்த், அருள் தாஸ் மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு ‘காந்தாரா’ புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

தற்போது, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தை தயாரிக்க பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் தி ரூட் கைகோர்த்துள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
#VJS50 Titled #Maharaja ???? ????
Written & directed by @Dir_Nithilan
@anuragkashyap72 @mamtamohan @Natty_Nataraj @Abhiramiact@AjaneeshB @Philoedit @DKP_DOP @infinit_maze @PassionStudios_ @TheRoute @Sudhans2017 @jagadishbliss @ThinkStudiosind @santhosh_music @jungleeMusicSTH… pic.twitter.com/mtyowdXTRi— VijaySethupathi (@VijaySethuOffl) July 12, 2023
இப்படத்தில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார். விஜய் சேதுபதியும், அனுராக் காஷ்யப்பும் ஏற்கனவே இமைக்கா நொடிகள் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் தீபிகா படுகோனே நடித்துள்ள ஷாருக்கானின் ஜவான் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025