உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது இதற்காக தான்! இயக்குனர் சீனுராமசாமி விளக்கம்!

உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது இதற்காக தான்.
நடிகர் விஜய்சேதுபதி இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக இருந்த 800 படத்தில் நடப்பதற்கு தமிழகத்தில் கடும் எதிப்பு கிளம்பியது. எதிர்ப்பினை தொடர்ந்து, விஜய்சேதுபதி, இந்த படத்தில் இருந்து விலகினார்.
இந்நிலையில், இயக்குநர் சீனுராமசமி செய்தியாளர் சந்திப்பில் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, விஜய்சேதுபதிக்கு எதிராக ட்வீட் செய்ததாக தொடர்ந்து மிரட்டல் வருகிறது. விஜய்சேதுபதிக்கும், எனக்கும் தனிப்பட்ட பிரச்சனை என சித்தரித்துள்ளனர் வாட்ஸப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல் வந்துகொண்டு இருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் ஆபாச வார்த்தைகளால், என்னை திட்டுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், குடும்பத்துடன் வசிக்கும் எனக்கு இதுபோன்ற மிரட்டல்கள் தொடர்ந்து வருவதால், முதல்வர் கவனத்துக்கு உடனே கொண்டு செல்ல விரும்பினேன். யார் இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன் என்றும் விளக்கம அளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025