கிளைமாக்ஸ் பாத்தா கண்ணீர் தான் : ‘வாழை’ படத்தின் ட்விட்டர் விமர்சனம்!

Vaazhai Twitter Review

சென்னை : வாழை படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலரும் படம் எமோஷனலாக இருப்பதாக  ட்விட்டரில் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘வாழை’ படம்  அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. படத்தினை பார்த்த பிரபலங்கள் ஏற்கனவே கண்கலங்கி மாரிசெல்வராஜை கட்டியணைத்து அழுது எமோஷனலை வெளிப்படுத்தினார்கள். அவர்களை போலவே, படம் பார்த்த மக்களும் படம் எமோஷனலாக இருப்பதாக தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் ட்விட்டரில் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதனை பற்றி, இந்த பதிவில் நாம் பார்க்கலாம்…

படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் ” வாழை படம் மாரி செல்வராஜின் மாஸ்டர் பீஸ்.முழுக்க முழுக்க நடிகர்கள், குறிப்பாக சிவனாய்ந்தன் & சேகர் ஆகியோரின் உண்மையான நடிப்புடன், நன்கு எழுதப்பட்ட உணர்ச்சிகரமான நாடகம். நிகிலா விமல் நன்றாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை அருமை. க்ளைமாக்ஸ் மனதைக் கவரும் வகையில் உள்ளது” எனக் கூறியுள்ளார்.


மற்றோருவர் ” இந்த மாதிரியான படத்துக்கு விமர்சனம் தேவையில்லை, போய்ப் பார்த்து அழ வைக்கும். க்ளைமாக்ஸ் முடிந்து இருக்கையில் இருந்து எழுந்திருக்க சிறிது நேரம் ஆகும்” என கூறியுள்ளார்.

மற்றோருவர் ” வாழை திரைப்படம் ஒரு எமோஷனலான திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. க்ளைமாக்ஸ் சில உண்மையற்ற உணர்ச்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மாரி செல்வராஜ் படத்தினை அருமையாக எடுத்து இருக்கிறார்” என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் ” வாழை படம் ஒரு ஃபீல் குட் தருணங்கள் மற்றும் தைரியமான கதைக்களம் கொண்ட படம்.  மாரிசெல்வராஜின் மிக நல்ல முயற்சி என்று சொல்லலாம்.  மாரிசெல்வராஜின் நிஜ வாழ்க்கையின் பயோபிக் என்பதால் க்ளைமாக்ஸ் மிகவும் அழுத்தமாகவும் கனமாகவும் இருந்தது.” என எமோஷனலாக தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
csk dhoni
Chennai Super Kings vs Punjab Kings ipl
retro
Chennai Super Kings vs Punjab Kings
ramadoss