மன வருத்தத்தில் வலிமை விநியோகிஸ்தர்கள்.! காரணம் இதுதானா.?

வலிமை பட ரிலீசுக்கு இன்னும் 15 நாட்களே இருக்கும் நிலையிலும் படக்குழு இன்னும் ட்ரைலர், டீசர் , பட விளம்பரம் என எதனையும் ஆரம்பிக்காமல் இருக்கிறதே என உள்ளுக்குள் விநியோகிஸ்தர்கள் வருத்தப்பட்டு வருகின்றனராம்.
அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வலிமை திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி (அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை) திரைக்கு வர இருக்கிறது. H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பாப்பு நிலவி வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, அடுத்தடுத்து வெளியாகும் தெலுங்கு பிரமாண்ட திரைப்படங்கள் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வெளியாகிக்கொண்டிருக்கிறது. அப்பட கதாநாயகர்கள் சூறாவளி சுற்றுப்பயணமாக ஹைதிராபாத், மும்பை, சென்னை என படத்திற்கு விளம்பரம் செய்து வருகின்றனர்.
ஆனால், தமிழில் பிரமாண்டமாக வெளியாக உள்ள வலிமை திரைப்படத்திற்கு இன்னும் 15 நாட்களே இருக்கும் நிலையிலும் விளம்பரம் தொடங்கவில்லை. அஜித் வழக்கமாக திரைப்பட விழா மட்டுமல்லாது எந்த விழாவிலும் கலந்துகொள்வதில்லை. அதனால், அவரை நினைத்து விநியோகிஸ்தர்கள் வருத்தப்படவில்லை.
ஆனால், பட தயாரிப்பு நிறுவனம் இன்னும் ட்ரைலர், டீசர் , பட விளம்பரம் என எதனையும் ஆரம்பிக்காமல் இருக்கிறதே என உள்ளுக்குள் புலம்பி வருகின்றனராம்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025