டிவிஸ்ட்….ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ஃட் கொடுத்த வெங்கட் பிரபு.!

Published by
கெளதம்

The GOAT: நடிகர் பிரபுதேவா பிறந்த தினத்தை முன்னிட்டு ‘THE GREATEST OF ALL TIME’ படக்குழு சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றழைக்கப்படும் பிரபுதேவாவின் 51-வது பிறந்த தினம் இன்று. இவர் டான்ஸ் மாஸ்டர் மற்றும் திரைப்பட இயக்குனர் என பன்முக திறைமை கொண்டவர். தற்பொழுது, நடிகர் விஜய்யின் ‘The GOAT’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

பிரபுதேவாவின் 51-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ‘The GOAT’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றரை வெளியிட்டு, படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த போஸ்டரை வெளிட்டுள்ளார்.

HBDPrabhuDeva [File Image]
ஆனால், விஜய் ரசிகர்கள் டீசருக்காக காத்திருந்த நிலையில், டிவிஸ்டாக பிரபுதேவா இடம்பெறும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் உடன் பிரபு தேவா தவிர, பிரசாந்த், வைபவ், மோகன், ஜெயராம் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

பிரபுதேவா

பிரபல நடன இயக்குனர் சுந்தரம் – மகாதேவம்மா தம்பதிக்கு மகனாக பிறந்த பிரபுதேவா, சிறு வயதிலேயே பரதநாட்டியம் உள்ளிட்ட நடன கலைகளை கற்றார். தந்தையிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றிய அவர் ஜென்டில்மேன் படத்தில், ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடலுக்கு புயலாக சுழன்றாடி, ரசிகர்களை கவர்ந்தார்.

பின்னர், காதலா காதலா, வானத்தை போல, உள்ளம் கொள்ளை போகுதே படங்களில், நடிகராகவும் திறமையை வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து, போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கி, ‘மாஸ்டர்’ என்ற செல்லப்பெயருடன் வலம் வருகிறார்.

Recent Posts

ரோஹித் – கோலி ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா? விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…

38 minutes ago

யூடியூப் புதிய விதிகள் : தரமற்ற வீடியோக்களுக்கு இனி காசு இல்லை!

யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது.  இதில் பலர்…

2 hours ago

’பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளரை திருமணம் செய்யப்போகும் நடிகை தான்யா!

சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…

2 hours ago

த.வெ.கவின் அடுத்த டார்கெட்…கோலாகலமாக நடந்த 2வது மாநாடு பந்தக்கால் நடும் விழா!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…

3 hours ago

நிமிஷா பிரியா வழக்கு : “ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி” – ஏ.பி.அபூபக்கர்!

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…

3 hours ago

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…

4 hours ago