துருவ் விக்ரமுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு காதல் கதை கூறியுள்ளார். விரைவில் இருவரும் இணையும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முதன் முதலாக நடித்த வர்மா திரைப்படம் படக்குழுவினருக்கு திருப்தி அளிக்காததால், மீண்டும் வர்மா திரைப்படம் வேறு இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா என எடுக்கப்பட்டது. படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டது.
இவர் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என எதிர்பார்த்த நிலையில், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து மஹான் எனும் படத்தை எடுத்து முடித்துள்ளனர்.
அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடியை மையமாக கொண்ட ஒரு படம் தயாராக இருந்தது. ஆனால், மாரி செல்வராஜ் தற்போது உதயநிதியை ஹீரோவாக வைத்து புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார். அதனால் அது முடிந்த பிறகே துருவ் விக்ரமை வைத்து படம் இயக்குவார் என கூறப்படுகிறது.
அதற்கிடையில், ஒரு படம் நடிக்க நினைத்த துருவ் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். அதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் துருவ்க்கு ஒரு காதல் கதை கூறியுள்ளாராம்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காதுவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…