ஃபர்ஸ்டு ரஜினி., நெக்ஸ்டு விஜய்.! ராமதாஸ் பேத்தியின் ‘அலங்கு’ படத்திற்கு தீவிர புரொமோஷன்…
டாக்டர் ராமதாஸ் பேத்தி சங்கமித்ரா தயாரிக்கும் அலங்கு படத்தின் ரிலீஸ் போஸ்டரை தவெக தலைவர் விஜய் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி , ‘அலங்கு’ எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ளார். இப்படம் வரும் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ரிலீஸ் ஆக உள்ளது.
உறுமீன், பயணிகள் கவனிக்கவும் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த எஸ்.பி.சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார். குணாநிதி எனும் புதுமுக நடிகர் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் நாய்கள் மற்றும் மனிதர்கள் இடையே நடக்கும் ஓர் உணர்ச்சிபூர்வமான கதைக்களமாகவும், கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் பற்றி கூறப்படும் கதைக்களமாகவும் இருக்கும் என படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது தெரிகிறது.
இன்னும் ரிலீசுக்கு சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் வேளைகளில் பட தயாரிப்பாளர் சங்கமித்ரா அன்புமணி ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு சமயத்தில் சூப்பர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து படக்குழு வாழ்த்து பெற்றிருந்தது.
அதனை அடுத்து, தற்போது அலங்கு படக்குழு தவெக தலைவரும், நடிகருமான விஜயை சந்தித்து அலங்கு படத்தின் ரிலீஸ் போஸ்டரை வெளியிட்டு விஜயின் வாழ்த்தை பெற்றுள்ளது படக்குழு. அப்போது படக்குழுவுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்து பிரியமுடன் விஜய் என கையெழுத்திட்டு ஒரு புத்தகத்தை அளித்துள்ளார். விஜயை சந்தித்த புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025