விஜய் பாடிய "kutty story" பாடல் சாதனை ! விஜய் ரசிகர்களின் வெறித்தனமே காரணம் !

நடிகர் விஜய் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்தப்படத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன்,

நடிகர் விஜய் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இந்தப்படத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, விஜய் டிவி தீனா, கைதி படத்தின் வில்லனாக அறிமுகமாகிய அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

விஜய் சேதிபதி விஜய்க்கு வில்லனாக நடிப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ தான் இப்படத்தை தயாரித்து வருகிறாார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 14ம் தேதி அருண்ராஜா எழுதி நடிகர் விஜய் பாடிய “குட்டி ஸ்டோரி” என்னும் பாடலின் லிரிக் வீடியோ youtubeல் வெளியிட்டனர்.  இந்த பாடல் விஜய் ரசிகர்கள்  மட்டுமின்றி அனைவராலும் ரசிக்கப்பட்டன. தற்போது இந்த பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்து கெண்டாடி வருகின்றனர்.