premalatha vijayakanth VIJAY [FILE IMAGE]
Vijayakanth : கோட் படத்தில் விஜய்காந்த் AI மூலம் வரவுள்ளதாக அவருடைய மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் AI மூலம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் வரவுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. விஜயகாந்த் விஜய்க்கும, வெங்கட் பிரபு குடும்பத்திற்கும் மிகவும் நெருக்கமானவர். எனவே, அவர் இந்த மண்ணில் இப்போது இல்லை என்பதால் அவருக்கு மரியாதையை செலுத்தும் விதமாக AI உருவாக்கம் மூலம் வெங்கட் பிரபு விஜயகாந்தை ஒரு காட்சியில் கொண்டு வர இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருந்ததது.
அந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என தெரியாமல் ரசிகர்கள் குழப்பி வந்தனர். இந்த நிலையில், அந்த தகவல் உண்மை தான் என கேப்டன் விஜயகாந்த் மனைவி பிரேமலதா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கோட் படத்தில் கேப்டன் விஜயகாந்தை AI மூலம் கொண்டு வருவதற்கு என்னிடம் அனுமதி வாங்க வெங்கட் பிரபு என்னை பலமுறை சந்தித்தார்.
வருகின்ற தேர்தலுக்குப் பிறகு தளபதி விஜய் கூட கோட் படத்தில் விஜயகாந்தின் AI அனுமதிக்காக என்னை சந்திக்கப் போகிறார்.கேப்டன் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர் சம்மதம் தெரிவித்து இருப்பார். எனவே தேர்தலுக்குப் பிறகு சாதகமாகத் நான் முடிவு தெரிவிப்பேன். விஜய் எனக்கு சிறிய வயதில் இருந்து தெரியும். அதைப்போல வெங்கட் பிரபுவையும் தெரியும்.
ஏனென்றால், அவர் இளையராஜாவின் குடும்பம் அவர்களுடைய குடும்பமும் எங்களுடைய குடும்பமும் எப்போதும் ஒற்றுமையாக சிறிய வயதில் இருந்தே நெருங்கி பழகி கொண்டு இருக்கிறாராம். எனவே, விஜய் கேட்டும் என்னால் நோ சொல்ல முடியாது அதைப்போல, வெங்கட் பிரபு கேட்டும் என்னால் நோ சொல்ல முடியாது. எனவே, நான் சம்மதம் தான் தெரிவிப்பேன்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…