vishal [file image]
நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ள நீதிபதி பி.டி.ஆஷா முன் பட்டியலிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக, 21 கோடியே 29 லட்சம் ரூபாயை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றிருந்தது. பிறகு, இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.
இந்நிலையில், விஷாலும், லைகா நிறுவனமும் கடனை ஏற்று செலுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தங்களுக்கு கொடுக்கவேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், விஷால் “வீரமே வாகை சூடும்” என்ற படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், லைகா நிறுவனத்திற்கு நடிகர் விஷால் கொடுக்க வேண்டிய ரூ.21.29 கோடியில், ரூ,15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று சேனை உயர்நிதிமன்றத்தில் விசரணைக்கு வந்த நிலையில், ரூ.15 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு மாற்றியமைத்துள்ளதாக விஷால் தரப்பு வாதம் முன் வைத்த நிலையில், மார்க் ஆண்டனி படம் வெளியான பிறகும் கடனை திருப்பி செலுத்தாதது ஏன் என நீதிபதி அப்துல் குத்தூஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து, நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா முன்பு பட்டியலிட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…