அந்த நடிகையால் கடும் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர்! அப்படி என்ன செஞ்சிட்டாரு?
M.G.Ramachandran : பிரபல நடிகை ஒருவர் செய்த விஷயம் எம்.ஜி.ஆரை ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய படங்களின் படப்பிடிப்பு தளம் அமைதியாக இருக்கும் என்று பல பிரபலங்கள் கூறி கேள்வி பட்டு இருக்கிறோம். அதைப்போல, எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு காலையில் சீக்கிரமே தொடங்கிவிடும்.
தொடங்கும் அந்த முதல் காட்சியில் எம்.ஜி.ஆர் காட்சி தான் எடுக்கப்படுமாம். அவருடைய காட்சிகள் எடுத்து முடித்த பிறகு தான் மற்ற பிரபலங்களுடைய காட்சிகள் எடுக்கப்படுமாம். இதனை எம்.ஜி.ஆர் செண்டிமெண்ட் ஆகவே பின்பற்றி வந்து இருக்கிறார். இதன் காரணமாகவே அவருடன் படங்களில் நடிக்கும் பிரபலங்கள் எல்லாம் சீக்கிரமாகவே வந்துவிடுவார்களாம்.
ஆனால், ஒரு முறை எம்.ஜி.ஆருடன் சரோஜா தேவி ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆன போது அவருக்கு ஹைதராபாத்தில் பெரிய வேலை வந்தது என்ற காரணத்தால் எம்.ஜி.ஆருக்கு முன்னதாகவே முதல் காட்சியில் நடித்துவிட்டு சரோஜா தேவி கிளம்பிவிட்டாராம். இந்த தகவல் எம்.ஜி.ஆருக்கு தெரிந்ததும் ரொம்பவே கோபப்பட்டுவிட்டாராம்.
நாம் தான் முதல் காட்சியில் நடிக்க்க போகிறோம் என்று மேக்அப் போட்டு கொண்டு இருந்த எம்.ஜி.ஆர் படப்பிடிப்புக்கு வந்த பிறகு தனக்கு முன்னாடியே சரோஜா தேவி படத்தில் நடித்துவிட்டு சென்றது தெரிந்துள்ளது. இதனால் கடுப்பான எம்.ஜி.ஆர் மீண்டும் மேக்கப் ரூமிற்கு சென்றுவிட்டாராம். பிறகு தயாரிப்பாளர் சமாதானம் செய்ய சென்றபோது கூட தயாரிப்பாளரை திட்டி எம்.ஜி.ஆர் திட்டி அனுப்பிவிட்டாராம்.
பிறகு தயாரிப்பாளரிடம் ஏன் இப்படி செய்தீர்கள் நான் தானே எப்போதும் முதல் காட்சியில் நடிப்பேன் என்று கேட்டாராம். அதற்கு தயாரிப்பாளர் இதனை பற்றி எனக்கு தெரியவே தெரியாது என்று கூறினாராம். அதற்கு எம்.ஜி.ஆர் சரோஜா தேவிக்கு தான் தெரியுமே நான் தான் முதல் காட்சியில் நடிப்பேன் என்று கோபப்பட்டாராம். இதன் காரணமாக தான் எம்.ஜி.ஆர் அரசகட்டளை படத்திற்கு பிறகு பெரிய அளவில் சரோஜா தேவியுடன் இணைந்து படங்களில் நடிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.