#RCBvKKR: 28 பந்துகளில் அரைசதம்.. "மேக்ஸ்வெல்" அதிரடி ஆட்டம்!

Maxwell hit a half-century off 28 balls as the Royal Challengers Bangalore-Kolkata Knight Riders clashed in today's match of the IPL.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், இதில் அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல், 28 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 10-ம் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – படிக்கல் களமிறங்கினார்கள்.

இதில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து கோலி தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய பட்டிதார் 1 ரன் மட்டுமே எடுத்தார். இதனையடுத்து மேக்ஸ்வெல் களமிறங்கி அதிரடியாக அடிவர, தொடக்கம் முதலே களமிறங்கிய படிக்கல் 25 ரன்களில் வெளியேறினார். பின்னர் டி வில்லிர்ஸ் களமிறங்க, மேக்ஸ்வெலுடன் இணைந்து அவரும் அதிரடியாக ஆட அணியின் ஸ்கொரை உயர்த்தினார். இந்நிலையில் மேக்ஸ்வெல், 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து விரைவில் அரைசதம் எடுத்தோர் பட்டியலில் இணைந்தார்.

பின்னர் 49 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து மேக்ஸ்வெல் வெளியேறினார். இதில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும். தற்பொழுது பெங்களூர் அணி, 17 ஓவர் முடிவில் 148 ரன்கள் அடித்தது. களத்தில் டி வில்லிர்ஸ் 33 ரன்களுடனும், ஜேமியேசன் 0 ரன்களுடன் உள்ளனர்.