ஐபிஎல் சீசன் 15வது தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி 176 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.
unknown nodeபஞ்சாப் அணி 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், இந்நிலையில் பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீத்தி சிந்தா அவர்கள் இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிக்கு முதல் முறையாக மைதானத்திற்கு நேரில் வந்து போட்டியை பார்த்துள்ளார்.
unknown nodeமுன்னதாக நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் பொழுது பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளரான பிரீத்தி சிந்தா அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
unknown nodeஇந்த ஆண்டு நடைபெறும் தொடரில் முதல் முறையாக நேற்று தான் அவர் மைதானத்திற்கு போட்டியை காண வந்துள்ளார். அப்போது தனது அணியினருக்கு கொடிகளை காண்பித்து உற்சாகப்படுத்திய ப்ரீத்தியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.