துருக்கியில் தனியாக வாழ்ந்த பிரபல பெண் யூடியூபரை அவரது தந்தையே கடத்தி கொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
துருக்கியில் 22 வயதான பிரபல பெண் யூடியூபர் டிபா அல்அலி (Tiba al-Ali), தனியாக வாழ்ந்ததற்காக அவரது தந்தை டிபாவின் கழுத்தை நெறித்து தூக்கிலிட்டுக் கொலை செய்துள்ளார். ஈராக்கில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த யூடியூபர் டிபா அல்அலி, 2017-இல் தனது குடும்பத்துடன் துருக்கிக்கு பயணம் செய்துள்ளார். அவர் குடும்பத்தினருடன் வீடு திரும்ப மறுத்து அவரது தாய் நாட்டை விட்டு வெளியேறி துருக்கியில் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
unknown nodeஅங்கு சிரியாவில் பிறந்த ஒருவரை காதல் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். ஆனால் ஜனவரி மாதம் நடந்த அரேபியன் கல்ஃப் கோப்பையில் (Arabian Gulf Cup) தனது நாட்டின் கால்பந்து அணிக்கு ஆதரவளிக்க ஈராக்கிற்கு திரும்பியுள்ளார். ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள ஒரு நண்பரின் வீட்டில் டிபா தனது தாயை சந்திக்க வந்துள்ளார். அப்பொழுது அவரது தாய் மட்டுமல்லாமல் முழு குடும்பமும் வந்ததால் ஆச்சரியமடைந்துள்ளார்.
unknown nodeஅங்கு டிபாவுக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டு, அல்-காதிசியா மாகாணத்தில் உள்ள அவரது குடும்ப வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு சிறிதுநேரம் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் அவரது தந்தை டிபா தூங்கியபோது அவரின் அறைக்குள் வந்து கழுத்தை நெறித்து, தூக்கிலிட்டுக் கொலை செய்துள்ளார்.
unknown nodeபிறகு தன் குடும்பத்திற்கு நேர்ந்த அவமானத்தை துடைப்பதற்காக தனது சொந்த மகளை கொன்றுவிட்டதாக போலீசாரிடம் சரணடைந்தார். தற்போது டிபாவை கொலை செய்ததற்காக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈராக்கின் தண்டனை சட்டத்தின்படி, கௌரவமான நோக்கங்களுக்காக கொலை செய்யும் நபர்களுக்கு சிறிய தண்டனைகளே விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.