ஐபோன் வாங்க பணமில்லாததால் டெலிவரி ஊழியர் கொலை..! சிசிடிவி வீடியோவால் சிக்கிய கொலையாளி..!

கர்நாடகாவில் ஐபோனுக்காக டெலிவரி ஊழியர் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் ஐபோனுக்காக டெலிவரி ஊழியர் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஐபோன் டெலிவரி செய்ய வந்த டெலிவரி ஊழியரை கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹாசன் பகுதியில் அரிஸ்கெரே நகரைச் சேர்ந்த ஹேமந்த் தத்தா என்பவர் 46,000 ரூபாய் மதிப்புள்ள ஐபோனை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இ-கார்ட் எக்ஸ்பிரஸில் பணிபுரிந்த ஹேமந்த் நாயக் என்பவர் அவரது ஆர்டரை டெலிவரி செய்ய வந்துள்ளார்.

ஐபோனை கொடுத்துவிட்டு ரூ.46,000 ஐக் நாயக் கேட்டபோது பணம் எடுத்துவருவதாக கூறி அவரை வீட்டிற்குள் உட்கார வைத்துள்ளார். பின்னர் பணம் கொடுக்காமல் தத்தா, நாயக்கை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து நான்கு நாட்கள் டெலிவரி ஊழியரின் உடலை அவரது வீட்டில் வைத்திருந்து அஞ்சோப்பல் ரயில் நிலையம் அருகே சடலத்தை எரித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் ரயில் நிலையம் அருகே எரிந்த நிலையில் சடலத்தை கண்டெடுத்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார் குற்றவாளி சடலத்தை எரிக்கச் சென்றபோது பைக்கில் சடலத்தை எடுத்துச் செல்வது தெரிந்தது. இதை வைத்து கொலை செய்த ஹேமந்த் தத்தாவை காவல் துறையினர் கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

unknown node