டெல்லியை சேர்ந்த கபடி வீராங்கனை, பயிற்சியாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனது அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வதேச நிகழ்வுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய புதுடெல்லியைச் சேர்ந்த 27 வயதான கபடி வீராங்கனை, பயிற்சியாளர் தன்னை பாலியல் பலத்தகாரம் செய்ததாகவும் தனது அந்தரங்க புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் குற்றம் சாட்டினார். பாதிக்கப்பட்ட கபடி வீராங்கனை கடந்த வாரம் குஜராத்தின் துவாரகாவில் உள்ள பாபா ஹரிதாஸ் நகர் காவல் நிலையத்தில் அவரது பயிற்சியாளர் ஜோகிந்தர் மீது புகாரளித்தார்.
unknown nodeஅவரளித்த புகாரில், அவர் 2012 இல் டெல்லியில் முண்ட்காவிற்கு அருகிலுள்ள ஹிரன்குட்னாவில் கபடி போட்டிக்கு தயாராகி வருவதாகவும் 2015 ஆண்டு ஜோகிந்தர் அனுமதியின்றி தன்னை பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். இதனையடுத்து 2018 ஆம் ஆண்டு ஜோகிந்தர், போட்டியில் அந்த பெண் வெற்றிபெற்ற பணத்தில் ஒரு பகுதியை அவரிடம் கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஜோகிந்தரின் வற்புறுத்தலால் அவரது வங்கிக் கணக்கிற்கு ரூ 43.5 லட்சத்தை மாற்றியதாக அவர் மேலும் கூறினார்.
unknown nodeகுற்றம் சாட்டப்பட்ட பயிற்சியாளர் ஜோகிந்தருக்கு 2018 ஆம் ஆண்டு திருமணமான நிலையில் கபடி வீராங்கனையின் அந்தரங்க புகைபடங்களை கசியவிடுவதாக மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து துவாரகா காவல்துறை துணை ஆணையர் எம் ஹர்ஷ வர்தன் கூறுகையில், பயிற்சியாளர் ஜோகிந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் கபடி வீராங்கனையின் நேரடி வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்ட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தலைமறைவான பயிற்சியாளரை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம் என்று ஹர்ஷ வர்தன் மேலும் கூறினார்