போலந்து நாட்டில் கத்திக்குத்து..! இந்திய வாலிபர் கொலை..!

போலந்து நாட்டில் 23 வயது இந்திய வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

போலந்து நாட்டில் 23 வயது இந்திய வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பாவில் உள்ள போலந்து நாட்டில் பணிபுரியும் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் கேரளாவின் திருச்சூர் மாவட்டம் ஒல்லூரைச் சேர்ந்த சூரஜ் என்று அடையாளம் காணபட்டுள்ளார். ஐந்து மாதங்களுக்கு முன்பு போலந்துக்கு சென்ற சூரஜ் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

unknown node

[Image Source : ians]

அங்கே ஒரு குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என்று தகவல்கள் உள்ளன. வாக்குவாதத்தைத் தொடர்ந்து சூரஜ் ஜார்ஜியாவைச் சேர்ந்த கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். அவர் மீது தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் அவருடன் இருந்த கேரளாவைச் சேர்ந்த மேலும் நான்கு இளைஞர்களும் இந்த தாக்குதலில் காயமடைந்ததுள்ளனர்.

unknown node

இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மேல் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போலந்தின் வார்சாவில் உள்ள இந்திய தூதரகம், சூரஜ் இறந்ததை உறுதி செய்து அவரது குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைக்க ஏற்பாடு செய்துள்ளது.