இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக இன்று மாலை 5:30 மணி அளவில் நடை திறக்கப்படுகிறது. இது தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.
இதையடுத்து நாளை முதல் 18 தேதி வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இந்த நாட்களில் தினமும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பல பூஜைகள் நடைபெற உள்ளது. இதனை அடுத்து 18-ம் தேதி இரவு 10:30 மணிக்கு அத்தாழ பூஜைக்கு ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக கேரள போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025