இன்று பலரும் கால்களில் கருப்பு கயிறு கட்டுகின்றனர் இது சரியா மற்றும் முறையாக எவ்வாறு பயன்படுத்துவது என்றும் ஒரு சிலருக்கு கருப்பு நிறம் சேராது என்று கூறுவார்கள் அவர்கள் என்ன செய்வது போன்ற சந்தேகங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.. எத்தனை வயதானாலும் இந்த கண் திருஷ்டி சுலபமாக ஒருவரை தாக்கி விடும். இந்த திருஷ்டியை போக்க பல வழிகள் உள்ளது அதில் ஒன்றுதான் இந்த காலில் கருப்பு கயிறு கட்டும் முறை. கருப்பு கயிறு கட்டுதலின் […]
திருநீறு சைவத்தின் ஒரு அடையாளமாக மட்டுமல்லாமல் ஒரு அங்கமாக கருதப்படுகிறது .சைவத்தில் அங்கங்கள் என்றால், பஞ்சாட்சன மந்திரம் ருத்ராட்சம், விபூதி. இதில் மிக முக்கியமாக கருதப்படுவது திருநீறு இது பல வகைகளில் நன்மைகளை பெற்று தரும், அது என்னவெல்லாம் என்றும் குளிக்காமல் திருநீறு வைக்கலாமா என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம். திருநீருக்கு நிறைய பெயர்கள் உண்டு .அதில் விபூதி என்றால் வி என்பது மேலான என்பதையும் பூ என்றால் ஐஸ்வரியம் என்பதையும் குறிக்கும், மேலான ஐஸ்வர்யத்தை […]
வாஸ்து என்பது ஒரு கட்டிடத்திற்கான உயிரோட்டமாகும். முந்தைய காலத்தில் வீடு கட்டுவதற்காக ஜாதகம் எழுதி அதற்கான ஆயுட்காலமும் எழுதப்பட்டது இது காலப்போக்கில் மாறி வாஸ்து மட்டுமே பார்க்கப்படுகிறது. பஞ்சபூதங்களின் சரியான சேர்க்கையே வாஸ்துவாக அமைகிறது. இந்த பஞ்சபூதங்களும் ஒரு வீட்டில் அமைந்து விட்டால் அந்த வீட்டில் அனைத்துமே சரியாக இருக்கும். இதில் ஒன்று சரியில்லை என்றாலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் உதாரணமாக நீரினால் ஒரு பிரச்சனை என்றால் அந்த வீட்டில் பண வரவு பாதிக்கப்படும். நீரை நாம் […]
சகுனம் என்பது ஒரு முன் அறிகுறி ஆகும், இது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது இதை ஒரு சிலர் மூடநம்பிக்கை என்றும் கூறுவர். சகுனத்தில் நல்ல சகுனம், கெட்ட சகுனம் என உள்ளது இவற்றைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம் முன்னோர்கள் , குலதெய்வங்கள் ,தேவதைகள் என, நல்ல சக்திகள் நமக்கு நடக்கவிருக்கும் தீயவற்றை முன்கூட்டியே உணர்த்தக்கூடியது சகுனம். அதாவது ஒரு ஒரு மணி நேரத்தில் நடக்க இருக்கும் விபத்தை முன்கூட்டியே அறிவுறுத்தி அதை […]
ஒவ்வொரு வீட்டு பூஜை அறையிலும் படங்கள் வைத்து வழிபடுவது ஒரு முறை, அதைத் தாண்டி விக்ரகங்கள் மற்றும் சிலைகள் வைத்து வழிபடுவதும் ஒரு முறை தான். படங்களை வைத்துக் கொள்வதற்கு அளவு இல்லை ஆனால் விக்ரகங்களை நம் வீட்டில் வைத்து வழிபடுவதற்கு அளவும் சில முறைகளும் உள்ளது அதைப்பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். விக்கிரங்ககளின் வகைகள் பொதுவாக விக்கிரகங்கள் இறைத்தன்மையை ஈர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இது அதன் அளவைப் பொறுத்து மாறுபடும். விக்கிரகங்கள், கருங்கல், பஞ்சலோகம் […]
சமையலறை என்பது ஒரு வீட்டின் ஆணிவேர் என்று கூறலாம். நம் வீட்டு சமையல் அறையில் ஒரு சில பொருட்களை வைத்தால் நிச்சயம் அன்னம் குறையாது, ஐஸ்வரியத்திற்கும் குறைவிருக்காது அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம் ஆரோக்கியம் சமையலறையில் தான் துவங்குகிறது, ஒரு குடும்பத்திற்கு முக்கிய இடம் எனலாம் அங்கு சமைக்கப்படும் உணவுகள் தான் அங்கு வசிக்கும் குடும்பத்தாருக்கு உணர்வாக மாறுகிறது அதன் மூலம்தான் நம் மற்ற வேலைகளை செய்ய முடிகிறது குறிப்பாக நடமாட முடிகிறது அப்படிப்பட்ட […]
பொதுவாக நாம் ஒரு காரியம் செய்கிறோம் என்றால் ராகு காலம், எமகண்டம் இருக்கக் கூடாது அதுபோல்தான் குளிகை நேரத்திலும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று நம் பெரியோர்கள் கூறியுள்ளனர் அதைப்பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ராகு காலம் எமகண்டம் என்பது துர்க்கை வழிபாட்டிற்கு சிறந்த நேரமாகும். அதுபோல் குளிகை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட என்பது பொருளாகும். அதாவது குளிகை நேரத்தில் நாம் எதை செய்தாலும் திரும்பத் திரும்ப செய்ய வைக்கும் என்பது அந்த நேரத்திற்கான தன்மையாகும். […]
திதி என்பது நம் இறந்தவர்களுக்கு செய்யும் முறையாகும் சிலர் இதை முறையாக செய்வதில்லை .அதனால் வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். திதியை எவ்வாறு செய்வது மற்றும் திதி கணக்கிடும் முறை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். திதி கொடுக்கவில்லை என்றால் என்ன பிரச்சனை வரும் தெரியுமா? திதி கொடுக்கவில்லை என்றால் இறந்தவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ,ஆனால் உயிரோடு வாழும் தலைமுறையினருக்கு நிறைய பிரச்சனைகள் வரும் குறிப்பாக குழந்தை பேரு கிட்டாமல் போகும் அப்படியே பிறந்தாலும் ஊனமுற்ற […]
அரச மர வழிபாடு என்பது மிக உயர்ந்த வழிபாடாகும். இந்த அரச மரத்தை ஏன் சுற்றிவர வேண்டும் அதனால் என்ன நன்மைகள் மற்றும் எந்தக் கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம்.. அரச மரத்தை அதிகாலையில் வலம் வருவதே சிறந்தது.அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மதேவரும் நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும் நுனிப்பகுதியில் சிவபெருமானும் வாசம் செய்கிறார்கள் அதனால்தான் அரசமரம் மும்மூர்த்திகளின் வடிவம் என கூறப்படுகிறது. அரச மரத்தை வளம் வருவதால் ஏற்படும் நன்மைகள் குழந்தை இல்லாதவர்கள் […]
அறிவியல் ரீதியாகவும் வழிபாட்டு ரீதியாகவும் ஒரு குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் மொட்டை அடித்து காது குத்த வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. இது பற்றி அடுத்த தலைமுறையினர் நம்மிடம் கேட்டால் நாம் பதில் சொல்ல தெரிய வேண்டும் அல்லவா… அது ஏன் என்று இந்த பதிவில் பார்ப்போம் . மொட்டை அடித்து காது குத்துதல் ஒவ்வொரு குடும்பத்திலும் மாறுபடும் .ஒரு சிலர் குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் செய்வார்கள் அல்லது ஒன்பது மாதத்தில் செய்வார்கள் இப்படி […]
இந்த வருடம் தைப்பூசம் ஜனவரி 25 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தைப்பூசம் என்றாலே முருகனுக்கு உரிய தினம் என்று அனைவருமே அறிந்ததுதான், ஆனால் அன்று யாரையெல்லாம் வழிபடலாம் ,தைப்பூசத்தின் சிறப்பு ,பூசம் துவங்கும் நேரம்,வழிபாடும் நேரம் பற்றி இப்பதிவில் பார்ப்போம். தைப்பூசத்தின் சிறப்பு பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் ஒன்று சேரும் நாளையே தைப்பூசம் என்கிறோம்.பழனியில் ஆண்டி கோலத்தில் இருந்த முருகப்பெருமானுக்கு பார்வதி தேவி ஞானவேலை கொடுத்த தினமாக தைப்பூசம் கருதப்படுகிறது. அந்த வேலை […]
போகி என்றாலே நம் அனைவரது நினைவுக்கும் வருவது பழையன கழிவதும் புதியன புகுதலுக்கும் உண்டான நாள். தை திருநாள் கொண்டாடுவதற்கு முதல் நாள் போகி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பழைய பொருள்களை எரிக்க வேண்டுமே என்று தேவையற்ற பொருட்களை எரித்து காற்று மாசடைவதை ஏற்படுத்துகிறோம் எனவே எவற்றையெல்லாம் எரிக்கலாம் அன்று யாரை வழிபாடு செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்… நம் முன்னோர்கள் அன்று வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு, ஆனால் இன்று நாம் வாழும் வாழ்க்கை […]
நம் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபடும் வழிபாட்டில் பல்வேறு முறைகள் உள்ளது ,அதில் அர்ச்சனை செய்வதும் ஒரு முறையாகும், அதை நம் பெயரில் செய்யலாமா அல்லது இறைவன் பெயரில் செய்வதா என சிலருக்கு சந்தேகம் ஏற்படும் அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் அர்ச்சனை என்பது அருள் சித்தல் என்பதாகும், அதாவது அர்ச்சனை பாட்டு ஆகும் நாமங்களால் இறைவனை பாடி வழிபட கூடியது. அங்கு உள்ள இறைவனிடம் நம் மனதில் உள்ள பிரார்த்தனைகளை விண்ணப்பம் செய்து அவரிடத்தில் […]
ஒரு கோவில் என்று எடுத்துக் கொண்டால் எல்லா இடத்திலேயும் வேண்டுதல் பண்ணலாம் என்று நினைப்பது தவறு. விழுந்து வணங்குவதற்கு என்று ஒரு இடமும் இருக்கு, பிரார்த்தனைகளை சொல்வதற்கு என்று ஓர் இடம் இருக்கு, நன்றி தெரிவிப்பதற்கு என்று ஓரிடம் இருக்கு இவ்வாறு அது என்னவென்று தெரிந்து கொண்டு வழிபாட்டை மேற்கொள்ளும்போதுதான் 100% வழிபாடு பலனுள்ளதாக இருக்கும் அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முதலில் ஒரு கோவிலுக்கு சென்றால் விநாயகர் சன்னதிக்கு சென்று நம் வேண்டுதலை கூறுவோம் […]
நம்மை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தியது நம் அப்பா அம்மா தான். ஆனால் பலருக்கும் ஏற்படும் சந்தேகங்களில் ஒன்று இறந்தவர்களின் முறையான வழிபாட்டு முறை பற்றிய சந்தேகம்தான். அவற்றை தீர்க்கும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது. வாழ்கின்ற காலங்களில் நம்மை எவ்வளவோ போற்றி பாதுகாத்து வளர்த்து இந்த அளவிற்கு நம்மை கொண்டு வந்தது நம் முன்னோர்களாகிய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி தான். ஒரு பொருள் கீழே விழுந்து விட்டால் அதை பக்கத்தில் உள்ளவர்கள் எடுத்துக் கொடுத்தால் சம்பந்தமே இல்லாதவர்களாக […]
ஒரு வீட்டு நிலை வாசல் என்பது தெய்வம் இருக்கும் இடம் என குறிப்பிடப்படுகிறது. இன்றும் புது வீடு கட்டுபவர்கள் நிலைவாசல் வைப்பதற்கு என்று ஒரு தினத்தை ஒதுக்குவார்கள். ஒரு வீட்டுக்குள் நாம் சென்றால் அது மங்களகரமாகத்தான் இருக்க வேண்டும் அதில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை நம் வீட்டு முன் வைக்க கூடாது அது என்னென்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நாம் ஒரு திருமணத்திற்கு சென்றால் அங்கு வரவேற்பவர்கள் நான்கு பேர் நின்று பன்னீர் தெளித்து […]
ஒரு பெண் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது பலவகை சீர்வரிசைகளை எடுத்துச் சென்றாலும் சில பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள் அது என்னவென்றும், காரணம் பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம். அன்றிலிருந்து இன்று வரை ஒரு பெண் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு சீர்வரிசை எடுத்துச் சென்றால் தான் அந்தப் பெண் மதிக்கப்படுகிறாள். ஆனால் ஒரு பெண் எடுத்துக் கொண்டு வருவது நல்ல குணம், பழக்கவழக்கங்கள், ஒரு குடும்பத்தை எவ்வாறு வழி […]
ஒரு மனிதனுக்கு உயிர் பெரிதா மானம் பெரிதா என்ற கேள்வி வந்து விட்டால் மானம்தான் பெரிது என அனைவரும் கூறுவோம், ஏன் வள்ளுவர் கூட ஒரு குரலில் உயிரை விட மானம்தான் பெரிது எனவும் மானம் போன பிறகு வாழ்வது உயிரற்ற உடலுக்கு சமமானது என்றும் கூறியுள்ளார், எனவே உயிரை விட மானத்தைக் காக்கக்கூடியது இந்த ஆடைதான் ஆடை என்பது ஆடம்பரமாக தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பார்ப்பதற்கு அழகாகவும் அவசியமானதாகவும் இருக்க வேண்டும் […]
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக போற்றப்படும் கடவுள் சபரிமலை என்ற திருத்தளத்தில் எழுந்தருளி அருள் புரியும் ஐயப்பன். தண்ட காருண்ய வனத்து மகரிஷியின் ஆணவத்தை குறைக்க ஹரிக்கும் ஹரனுக்கும் பிறந்தவர். பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்கக் கூடிய இந்த தெய்வம் சின் முத்திரையுடன் யோக பட்டை அணிந்து காட்சி தருகிறார். இவரை வழிபட்டால் நாம் என்ன பிரார்த்தனை செய்கிறோமோ அத்தனையும் கிடைக்கும் என்பது ஐதீகம். முறையான விரத நாட்கள் முந்தைய காலகட்டத்தில், தை மகர ஜோதிக்கு கார்த்திகை மாதம் மாலை அணிந்து […]
கல் அடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என சொல்வார்கள். கண் திருஷ்டி படாமல் இருக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளது .அதில் ஒரு சில முறைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்… குழந்தைகளுக்கு கண் திருஷ்டி போக பின்பற்ற வேண்டியவை : ஒரு குழந்தை பிறந்து 16வது நாளிலிருந்து சுத்தமான கரிசலாங்கண்ணி சாரில் இருந்து தயாரிக்கப்பட்ட கண் மையை பயன்படுத்துவது சிறந்தது. ரசாயனம் கலந்த கருப்பு பொட்டுகளை பயன்படுத்தினால் அந்த மென்மையான சருமத்தில் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது […]